தாய்லாந்தில் தமிழ் குடும்ப திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தாய்லாந்தில் தமிழ் குடும்ப திருவிழா

அக்டோபர் 15,2020 

Comments

தாய்லாந்தில் உள்ள ராயோங் மாகாணத்தில் தமிழ் குடும்பத்தின் 2 வது திருவிழா இனிதாக நடைபெற்றது. தமிழ் குடும்பங்கள் திரளாக கலந்து கொண்ட இத்திருவிழாவில் காலை சிற்றுண்டி மற்றும் புகை படம் எடுக்கும் விழாவுடன் தொடங்கியது நிகழ்ச்சி. குடும்பங்களின் அறிமுக நிகழ்ச்சி , குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெரியவர்களின் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடை பெற்றது. கார்த்திக் மற்றும் தேவி கார்த்திக் வரவேற்புரை மற்றும் தொகுப்புரையை வழங்கினர் . பாலசுப்ரமணியத்தின் கவிதையில் அரங்கம் கலை அரங்கமாக களை கட்டியது . சீனிவாசனின் பாடல் மழையில் அரங்கம் இசை சுரங்கமானது. குழந்தைகள் மற்றும் ஜெரினா நாட்டியத்தில் அரங்கம் அதிர்ந்தது. விக்டர் மற்றும் சாமி கூட்டணியில் ஒலி ஒளி இசை தொகுப்பு பங்கேற்பாளர்களை பரவசமூட்டியது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மதிய விருந்து கல்யாண விருந்தாக களை கட்டியது. நிகழ்ச்சிக்கு வந்தோமா இல்லை கல்யாணத்திற்கு வந்தோமா என்று வியக்கும் வகையில் விருந்தோம்பல் நடந்தது.இதற்கு அருள்முருகன்,அருள், அரவிந்தன், ராஜ்குமார், யுவராஜ் மற்றும் அன்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்து அசத்தினர். தேவி, நித்யஸ்ரீ, சரண்யா, ராஜி, பிரியா, தேன்மதி ,மேரி, கீர்த்தி, ஷிவாணி மற்றும் மகளிர் குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் சிறப்பான முறையில் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். தாய்லாந்து தமிழ் சங்கத்தில் இருந்து தமிழ் நண்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சியினையும் நடத்தினர். மலேசியாவில் இருந்து ஜேம்ஸ் கலந்து கொண்டு பத்திரங்களையும் பரிசினையும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.– தினமலர் வாசகர் பட்டனசாமி


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us