இரண்டு வயது குழந்தை அனிகா ஸ்ரீயின் அபார சாதனை ! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இரண்டு வயது குழந்தை அனிகா ஸ்ரீயின் அபார சாதனை !

அக்டோபர் 16,2020 

Comments

  குறள்: அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் 


அஃதுஅறி கல்லா தவர்.பொருள்:
'அறிவுடையார் வருங்காலத்தில் நிகழப்போவதை முன்பே எண்ணி அறிய வல்லவர் ஆவர்: அறிவில்லாதவரால் அவ்வாறு அறிய முடியாது'


அமெரிக்காவில் பிளோரிடா மாநிலம் லேக்லேண்ட் பகுதியைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி- பழனிவேல் மனோகரன் தம்பதியினரின் இரண்டு வயது குழந்தை அனிகா ஸ்ரீ, ஓர் குழந்தை மேதை என்றே சொல்லலாம். 
விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் சக்தி இருந்தது அனிகாவிடம் என பெற்றோர் சொல்கின்றனர். விளையாட்டுப் போக்கிலேயே இவர்கள் கற்றுத்தர அவளும் உற்சாகமாக ஆர்வம் காட்டினாள். அதன்படி அவள் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அம்மா தன் முழு நேரத்தையும் அனிகாவிடம் செலவழிக்கத் தொடங்கினார். அதன் விளைவு அவள் நல்ல அறிவுக் குழந்தையாக உலகிற்கு தெரிய பெரும் உதவியாகவே இருக்கிறது. இன்று பல வெற்றிகளைக் குவிக்கத் துவங்கிவிட்டாள்!இரு வயதிற்குள்ளாகவே அனிகா, 400 ஃபிளாஷ் கார்டுகள் -பொருள்கள் மற்றும் பிரபலமான நபர்கள், போக்குவரத்து அறிகுறிகள், கிரகங்கள், நாடுகள், கால அட்டவணைகள், வடிவங்கள், நிறங்கள், விலங்குகள், பழங்கள், பொது விஷயங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள், வாகனங்கள், எழுத்துக்கள், மாதங்கள் , வார நாட்கள், எண்கள், கண்ட பெயர்கள் என பார்த்து தெளிவாய் சொல்லத் துவங்கினாள். மேலும், அவள் ஆறு வெவ்வேறு போர்டு புதிர்களை தீர்க்கிறாள்.
இதுவரை அனிகா ஸ்ரீ பெற்ற அங்கீகாரம்:


வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் - யுகே


இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் - இந்தியா


சர்வதேச புத்தகங்களின் பதிவு - சூப்பர் டேலண்டட் குழந்தைக்கான விருது


(ஆசியா புக் ஆப் ரெகார்டஸ் சான்றிதழ் வரவிருக்கிறது)

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் 


மண்ணில் பிறக்கையிலே 


பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பதிலே”-


எனும் புலமைப்பித்தன் அவர்களின் பாடல் வரிகள் அனைவர் நினைவிலும் வரும். இந்த குட்டிப்பெண்ணின் அம்மாவின் வளர்ப்பு, தந்தையின் ஆதரவு, அனிகா ஸ்ரீ நல்லவைகளையே கற்று மேலும் மேலும் பேரும் புகழும் பெற வேண்டும் என தினமலர் சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம்!


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us