பஹ்ரைனில் அப்துல் கலாம் நினைவு இரத்த தான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் அப்துல் கலாம் நினைவு இரத்த தான முகாம்

அக்டோபர் 18,2020 

Comments

பஹ்ரைன் மனாமா: பஹ்ரைனில் சேவை நோக்கோடு இயங்கிவரும் அன்னை தமிழ் மன்றம், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கிங் ஹமாத் பல்கலைகழக மருத்துவமனையோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாம், அக்.,16 அன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் சரியாக 51 கொடையாளர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர். அன்னை தமிழ் மன்றத்தின் சமூகநலத்துறையும், மன்ற நிர்வாகிகளும், மருத்துவமனை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மிக நேர்த்தியாக இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஒவ்வொரு கொடையாளருக்கும் சான்றிதழும், நினைவுப்பரிசும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக வழங்கப்பட்டது. அன்னை தமிழ் மன்றம் சார்பாக நிர்வாகிகள் ஒன்றிணைந்து மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று காலத்தில் பாதுகாப்பு வழிமுறைகளோடு ஏற்பாடு செய்த அன்னை தமிழ் மன்றத்தினருக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.– நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us