தாய்லாந்து தமிழ் கூட்டமைப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தாய்லாந்து தமிழ் கூட்டமைப்பு

அக்டோபர் 20,2020 

Comments

தாய்லாந்து தமிழ் கூட்டமைப்பு, தாய்லாந்து வாழ் தமிழ் அன்பர்களால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு . இந்த அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளையும், மாணவர்களுக்கான வழி காட்டி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர்களாக சுந்தரம் (பாங்காக் ), தமிழ்ச்செல்வன்( பாங்காக் ), கார்த்திக் (ராயோங் ), சரவணகுமார் (சோன்புரி), ஜவகர் (பாங்காக் ), மாணிக்கவேல் (அயோத்தியா), கார்த்திக் (சோன்புரி), மணிகண்டன் (பாங்காக் ) ஆகியோர் செயல்படுகின்றனர். தாய்லாந்து தமிழ் கூட்டமைப்பின் மாதாந்திர மின்னிதழ் ' உறவுகள் ' தமிழ் மாதம் சித்திரை முதல் தேதியில் வெளி வந்தது. அத்தோடு தமிழ் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் தமிழ் வகுப்பில் ஐம்பது தமிழ் மாணவர்கள் தமிழ் கற்கிறார்கள். மாணவர்களின் வயதின் அடிப்படையில் அரும்பு, மொட்டு,முகை, மலர் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்த படுகிறது. இந்த கூட்டு முயற்சியின் மூலம் நம் தமிழ் சமூகத்தின் அடுத்த தலைமுறை சிறுவர் சிறுமியர் நமது தாய் மொழியில் கற்று தேர்ந்த சமூகமாக உருவாக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியானது. ஆசிய மற்றும் தாய்லாந்து தமிழ் கூட்டமைப்புகள், தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் லெமூரியா தற்காப்பு பயிற்சி பள்ளியுடன் இணைந்து நமது பாரம்பரிய கலைகளை இணைய வழியில் பயிற்சி வகுப்புகளாக நடத்தி வருகின்றனர். ராயோங் தமிழ் குடும்பம் நடத்திய தமிழ் பண்டிகையில் திரளாக கலந்து கொண்ட தமிழ் கூட்டமைப்பு தோழர்கள் விழாவை சிறப்பித்ததோடு அல்லாமல் மாணவர்களின் வழிகாட்டி நிகழ்ச்சியினையும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.– தினமலர் வாசகர் பட்டனசாமி சின்னதம்பி


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us