அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் - தொடக்கவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் - தொடக்கவிழா

அக்டோபர் 20,2020 

Comments

அயர்லாந்தில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கும், இளையோருக்கும் மற்றும் தமிழ் கற்க விரும்புவோர் அனைவருக்கும் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டு விஷயங்களை எடுத்துச் செல்லும் விதமாக வணிக நோக்கமற்ற, சாதி, மத, அரசியல் சார்பற்ற அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.


கடந்த அக்டோபர் 18-ந் தேதி நடந்த தொடக்க விழாவில், இதை அயர்லாந்திற்கான இந்தியத் தூதர் சந்தீப் குமார், மெய்நிகர் தளம் மூலமாகத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜனின் வாழ்த்து செய்தியும் வாசிக்கப்பட்டது.


மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் முனைவர். அன்புச் செழியன் தலைமையேற்று நடந்த இந்த விழாவில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். குறிஞ்சிவேந்தன், இலங்கை பேராசிரியர் முனைவர்.சண்முகதாஸ், பிரான்ஸ் தமிழறிஞர் பேராசிரியர். பெஞ்சமின் லெபோ, அயர்லாந்து தாய் மொழிகள் நிறுவன இயக்குனர் பேராசிரியர் பிரான்ஸிஸ்கா மற்றும் அயர்லாந்து டொனெகால் கலாச்சாரத்தளம் (Donegal Intercultural Platform) அமைப்பின் பால் கிர்னன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உலகின் பல பகுதிகளிலிருந்து தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்துச் செய்திகள் வழங்கினர்.


உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு குழந்தைகளுக்குத் தமிழ் வகுப்புகள் வழங்கவிருக்கும் இந்த அமைப்பு - பெரியவர்களுக்கு கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான கருத்தமர்வுகளையும், பயிற்சிப் பட்டறைகளையும் உலகின் பல்வேறு தமிழ் ஆய்வு நிறுவங்களோடு இணைந்து எதிர்காலத்தில் வழங்கவிருப்பதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


– தினமலர் வாசகர் ரமேஷ் குருநாதன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us