லண்டன் கோயில்களில் நவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக மிகக் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். லண்டன் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 5 படிகளில், கண்கவரும் விதத்தில் அழகுற அமைக்கப்பட்டுள்ள கொலுவில் ஏராளமான சாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. முப்பெரும் தேவியர்களுடன், மஹிஷாசுரமர்த்திரி அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச் செய்துள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாவிட்டாலும், நாள்தோறும் பூஜைகள் சிறப்புற நடைபெற கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.