பெண்களுக்கான பெண்களே நடத்தும் மின்னிதழ் - ஓர்ஆய்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பெண்களுக்கான பெண்களே நடத்தும் மின்னிதழ் - ஓர்ஆய்வு

அக்டோபர் 24,2020 

Comments

  உலகெங்கும் சிறந்த தமிழ்ச் சேவை புரிந்து வரும் முனைவர் திரு. அமிர்தகணேசன் (அகன்) புதுச்சேரியில் 'ஒருதுளிக்கவிதை' என்னும் அமைப்பை நடத்தி வருகிறார். இவரால் ஜனவரி 2020இல் உலகளாவிய பெண்களின் எழுத்துத் திறமையை வெளிக்கொணரும் நோக்கில் அட்லாண்டாவை மையமாக வைத்து ”உலகப் பெண் கவிஞர் பேரவை' உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், இலங்கை, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலிருந்து 75க்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் மற்றும் நூலாசிரியர்கள் இணைந்து தம் படைப்புகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவர்களால் சில கவியரங்க நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்பட்டு அமெரிக்கத் தமிழ் வானொலி ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.


பெண்களின் படைப்புகளைக் கொண்ட, அழகிய வடிவமைப்புடன் கூடிய ”வல்லினச் சிறகுகள்” என்ற மாதாந்திர மின்னிதழ் செப்டம்பர் 2020இல் தொடங்கப்பட்டது. அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேரவை உறுப்பினர்கள் அகன் ஐயாவுடன் ஆசிரியர் குழுவில் இணைந்து, இவ்விதழை உருவாக்கி வருகிறார்கள். இதில் மலரும் மரபு (மரபுக் கவிதைகள்), இலக்கியம் சார்ந்த சிறப்புக் கவிதைகள், சங்கப் பலகை (நூல் மதிப்புரை), உலகப் பெண் கவிஞர் யார் எவர்?, சுர ஊர்வலம் (இசைப் பாடகிகளின் நேர்காணல்), அமெரிக்காவின் ஆற்றல் மிகு பெண்கள் (நேர்காணல்), பெருமைக்குரிய பெண்கள் (நேர்காணல்), மொழிபெயர்ப்புக் கவிதைகள், உலகப் பெண் கவிஞர்களின் பல்வகைப்பட்ட கவிதைப் படைப்புகள், மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதைகள் போன்றவை வெளியிடப்பட்டு வருகின்றன.


அக்டோபர் மாதம் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 87ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவரைப்பற்றிய வாழ்த்துரைத் துளிகளோடும், கவித்துளிகளோடும் 102 பக்கங்களுக்குச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.


இதழை வாசிக்க: https://tinyurl.com/yxoyvds7


மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அவர் பெயரில் விருதுகள் அளிப்பது அவரின் 80-ஆம் பிறந்தநாள் முதல் நடைமுறையில் உள்ளது. ஆகச் சிறந்த படைப்பாளிகளுக்கு 'தமிழன்பன் 80' எனும் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்படுகிறது.


மரபு மாமணி திருமிகு. சியாமளா ராஜசேகர் (சென்னை) இவ்வாண்டின் தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது ( மரபு வகைமை) பெறுகிறார்.


அயலகத்தில் இவ்வருடம் தமிழன்பன் 80 விருது பெறுவோர்:ஊடகம்: திருமிகு. ஆறுமுகம் பேச்சிமுத்து, அமெரிக்கத் தமிழ் வானொலி, டெய்சி ஜெயபிரகாஷ், ஊடக அறிவிப்பாளர். கலை: வலைக்குழல் ஆக்கம்: சந்திரகெளரி சிவபாலன், ஜெர்மனி. நாடகம்: ஜெயா மாறன், அட்லாண்டா, இசை: ஜீவரேகா கிருஷ்ணராஜ், அட்லாண்டா. தமிழ்ப்பணி: விஜய் அசோகன், சுவீடன், தமிழ் கற்பித்தல்: கலைச்செல்வி கோபாலன், சிகாகோ, எழுத்து: நாடகம்: செல்வா, அட்லாண்டா, உரைநடை இராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா, கவிதை: சுவர்ணா முத்துகிருட்டிணன், நியூஜெர்சி, இன்பா, சிங்கப்பூர். ம. வீ. கனிமொழி, வெர்ஜீனியா.


வல்லினச் சிறகுகளுக்கும் விருது பெற்றோருக்கும் வாழ்த்துகள்!


~அன்புடன் ஆனந்தி, மிச்சிகன், அமெரிக்கா

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us