ஷார்ஜாவில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அக்டோபர் 24,2020 

Comments

ஷார்ஜா : ஷார்ஜா எம்.டி.எஸ். நிகழ்வு மேலாண்மை நிறுவனம் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜூம் இணையவழி வாயிலாக 23.10.2020 ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சமூக சேவகர் கவிதாயினி கலாவிசு தலைமை வகித்தார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.சென்னை டாக்டர் சரிதா தாமோதரன் (Clinical & Radiation Oncologist) பங்கேற்று மார்பகப் புற்றுநோய் தொடர்பான பல்வேறு விஷயங்களை விளக்கப்படங்களுடன் விவரித்தார். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. ஷார்ஜா எம்.டி.எஸ். நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சமூக ஆர்வலர் கல்லிடை ஆ. முகமது மைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். உலக தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் ஸ்ரீ ரோஹினி நிகழ்வினை சிறப்புடன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியானது யூடியூப் சேனல் வழியாகவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் இந்தியா, அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்கள் நேரடியாக நிகழ்ச்சியினை பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது. ---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us