சிங்கப்பூரில் நவராத்திரி ஏழாம் நாள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் நவராத்திரி ஏழாம் நாள் விழா

அக்டோபர் 24,2020 

Comments

பல இன மக்கள் வாழும் தொபாயோ பகுதியில் கருணையே வடிவாக எழுந்தருளி ஆட்சி புரியும் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயமான அருள்மிகு வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் அன்னை பராசக்தி ஸ்ரீ சாரதாம்பாள் வடிவில் சர்வ அலங்கார நாயகியாகக் காட்சி தந்து அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாகும். இன்றைய இக்கட்டான சூழல் கருதி ஆலயத்திற்கு நேரில் வந்து தரிசிக்க இயலாதவர் நலன் கருதி சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் அனைத்துப் பூஜைகளையும் நேரலையாக ஒலி – ஒளி பரப்புவது பாராட்டுக்குரியதாகும். பக்தப் பெருமக்கள் அவரவர் இல்லங்களிலிருந்தே உள்ளங் குளிர அம்பிகையைத் தரிசித்து ஆனந்தம் கொள்ளுகின்றனர். ஆலயத்திற்கு வருகை புரிவோரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு நின்று மனமுருகப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us