சிங்கப்பூரில் தீபாவளி கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தீபாவளி கோலாகலம்

அக்டோபர் 25,2020 

Comments

ஆண்டுதோறும் லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் சுடர் விடும் வண்ண மின் விளக்குத் தோரணங்கள் இவ்வாண்டும் ஜொலித்துப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வலங்கார விளக்குத் தோரணங்கள் டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை குட்டி இந்தியாவை அழகு படுத்திக் கொண்டிருக்கும். துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் , தகவல் தொடர்புத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் , இளையர் துறை துணை அமைச்சர் எல்வின் டான் , மத்திய வட்டார மேயர் டெனிஸ் புவா ஆகியோர் தீபாவளி ஒளியூட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக ஒளி அலங்கார மிதவை அமைக்கப்பட்டுள்ளது. இருளை நீக்கி ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும் தீப ஒளித் திருநாள் கொரானா இக்கட்டிலிருந்தும் மீண்டு வர வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகத் துணைப் பிரதமர் தமதுரையில் குறிப்பிட்டார். தீபாவளியைக் கொண்டாடுகிற நேரத்தில் அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் மக்கள் பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார். தீபாவளியை யொட்டி ரங்கோலி – மருதாணியிடல் – சடையல் பயிலரங்குகளை இணையவழியில் நடத்த “ லிஷா “ ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக அமைக்கப்படும் தீபாவளி சந்தை – தீபாவளி கிராமம் இம்முறை இருக்காது. பலகாரங்கள் – ஆடை ஆபரணங்களை வழக்கமான கடைகளிலேயே மக்கள் வாங்கிக் கொள்ளலாம். – நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us