சிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்

அக்டோபர் 27,2020 

Comments

சிங்கப்பூர் ஆலயங்களில் நவராத்திரி விழா அக்டோபர் 17 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. தொபாயோ அருள்மிகு வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ அம்பாள் எழுந்தருளி ஆசிர்வதித்தது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. எட்டாம் நாள் ஸ்ரீ மூகாம்பிகை அலங்காரத்திலும், ஒன்பதாம் நாள் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்திலும், பத்தாம் நாள் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியாகவும் காட்சி தந்து அருள்பாலித்தார். 26 ஆம் தேதி விஜயதசமி அன்று, அம்பு எய்தல் நிகழ்வு தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. மூன்று நாட்கள் துர்க்கா தேவியாகவும் ,அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், எஞ்சிய மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் எழுந்தருளி சகல சௌபாக்கிங்களையும் வழங்கிய பாங்கு பக்தப் பெருமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

விஜயதசமி நாளில் வித்யாரம்பம் பிள்ளைகளுக்குச் செய்து வைக்கப்பட்டது. ஒன்பது நாட்களும் கொலு வீற்றிருந்து பத்தாம் நாளில் பரி வேட்டை வைபவம் நடைபெற்றது. அம்பிகை குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பெய்தி வெற்றி கொண்ட காட்சி தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. தீமையை வென்று நன்மைகள் பெருக அருள்பாலித்த வெற்றித் திருநாளே இக்காட்சி. ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டதும் பக்தப் பெருமக்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு அமர்ந்து வழிபட்டதும் பாராட்டுக்குரியதாகும் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாடும் அர்ச்சகர்களின் அலங்காரக் காட்சிகளும் எல்லோராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us