நைஜீரியாவில் அமைதியான நவராத்திரி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் அமைதியான நவராத்திரி

அக்டோபர் 27,2020 

Comments

லேகோஸ் : நைஜீரியாவில் நவராத்திரி வழிபாடு அக்டோபர் 16ம் தேதி கலச ஸ்தாபனம் செய்து ஐசிஏ வளாகத்தில் உள்ள நமது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் துவங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்படாத நிலையில், இந்திய சமூகத்தினர் கூடும் வழிபாடு இடங்கள் முழுமையாக திறக்கப்படவில்லை. ஆதலால் கொலு இல்லாத ஆலயமாக, அம்பாளுக்கு அலங்காரம் மட்டும் செய்து நவராத்திரி வழிபாடு நடைபெற்றது. அக்டோபர் 17ம் தேதியிலிருந்து துர்க்கை நாளொரு அலங்காரம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். இந்த ஆண்டு கோயில் குழுமம் மற்றும் அர்ச்சகர் ஶ்ரீ சிவகுமார் சிவாச்சாரியார் அம்பாளை பூக்களால் அலங்கரித்து காட்டினர். நவராத்திரி முழுவதும் பக்தர்கள் அவர்களது பூஜை, பாராயணம், பக்தியை ஜிட்ஸி செயலி மூலம் வெளிப்படுத்தினர். 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து அம்பாள் கடாஷத்தை பிரதிபலித்தனர். லேகோஸ் தேவியர்களும் பாராயணம் செய்தனர். நேரடியாக அம்மன் தரிசனம் பெற இயலவில்லை என்றாலும் கோயில் அர்ச்சகர், நிர்வாகிகள் மற்றும் அலங்கார குழு தங்கள் அயராத உழைப்பால் 2020 நவராத்திரியை நினைவில் வைக்க செய்தனர். கடந்த 9 வருடமாக நவராத்திரியை சிறப்பாக செய்துவரும் இக்குழுமம் இந்த வருட அலங்காரத்துடன் சேர்த்து மொத்தம் 54 அம்பாள் அலங்காரம் செய்திருக்கின்றனர். இதில் ஒவ்வொன்றும் ப்ரத்யேக அலங்காரம், மீண்டும் செய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.– நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us