வட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவையில் எஸ்பிபி.,க்கு புகழஞ்சலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவையில் எஸ்பிபி.,க்கு புகழஞ்சலி

அக்டோபர் 28,2020 

Comments

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமிற்கு அக்டோபர் 25 ம் தேதியன்று புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இணைய வழியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையை சேர்ந்த பாலா சாமிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரவையில் இயக்குனர் சுந்தர் குப்புசாமி, நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். கால்டுவெல் வேல்நம்பி நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். இதில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் பார்த்திபன், பின்னணி பாடகி பி.சுசீலா, பாடலாசிரியர் வைரமுத்து, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன், பாடகர் மனோ ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் எஸ்பிபி., குறித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பாடகர் மனோ, எஸ்பிபி.,யில் பாடல்களை பாடி நினைவஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் நேரலையில் கண்டுகளித்தனர். அத்துடன் எஸ்பிபி., மற்றும் இந்நிகழ்ச்சி குறித்த தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us