தமிழோசை தமிழ் பள்ளியின் 3ம் ஆண்டு துவக்க விழா நைஜீரியா தமிழ் சங்கத்தின் சார்பில் இலக்கிய விழாவாக கொண்டாடப்பட்டது. சரஸ்வதி பூஜையன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜும் செயலியின் வழியே பன்னாட்டு தமிழ் சங்கங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தன. கென்யா, தான்சானியா, தென் ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் நியூஜெர்ஸி மற்றும் இந்தியாவிலிருந்து தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். சிறப்பு வாழ்த்துரையை எழுத்தாளர் அன்புச்செல்வன், "ஆப்பிரிக்க தமிழ் சாரல்" இதழின் ஆசிரியை எழுத்தாளர் நாச்சியார், எழுத்தாளர் லதா அருணாசலம், எழுத்தாளர் - கவிஞர் சிவராமன் மற்றும் கவிஞர் பாபு சசிதரன் வழங்கி நிகழ்ச்சியை இனிதாக்கினர். நிகழ்ச்சியில் முனைவர் பர்வீன் சுல்தானா, பாவலர் அறிவுமதி, கவிஞர் மகுடேசுவரன் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழோசை பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பாராட்டு மின்-சான்றிதழ் அனைவரின் முன்னிலையில் வழங்கி நைஜீரியா தமிழ் சங்கம் கௌரவித்தது. தமிழ் ஆர்வலர்களோடு தமிழ் ஆளுமையும் உரையாடிய இந்நிகழ்வு நைஜீரியா தமிழ் சங்கத்தின் வரலாற்றில் ஒரு பளிங்கு மைல்கல் என்றே கூற வேண்டும். – நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.