வாழ்வியல் இலக்கியப்பொழில் ஐரோப்பா அமைப்பின் முதலாம் ஆண்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வாழ்வியல் இலக்கியப்பொழில் ஐரோப்பா அமைப்பின் முதலாம் ஆண்டு விழா

நவம்பர் 13,2020 

Comments

'வாழ்வியல் இலக்கியப்பொழில் (ஐரோப்பா) ' அமைப்பின் முதலாம் ஆண்டுவிழா 01.11.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 4.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது. 'ஐந்துகரத்தனை' என்ற தேவாரத்தோடு நிகழ்ச்சியை சுவீஸ் நாட்டில் இருந்து பிரியா மூர்த்தி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சரளா விமலராஜா வெண்பாவோடு தொகுப்பாளர் இருவரின் அறிமுக உரையும் நடைபெற்றது.தொடர்ந்து ஜெர்மனியிலிருந்து சக்திதேவி சிறினிசங்கர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி ஆரம்பித்த நிகழ்வு, பிரான்ஸ் நாட்டில் இருந்து பரதநாட்டிய நிகழ்வில் சுபீட்சா சத்தியநாதன், ஹம்சத்வனி சசிக்குமார், நிர்த்தியா சிவலிங்கநாதன், நேர்த்தியா நந்தகுமார், ரமீனா ரவீந்திரன், இலக்கியா ஆதவன் ஆகியோர் அழகாக ஆடிச்சென்றனர். சங்கீதம் பாட சுவீஸ் நாட்டில் இருந்தது நஜனி நவகன், பிரான்ஸ் நாட்டில் இருந்து அமலியா சத்தியநாதன் சிறப்பான பாடலைத் தந்தனர். திருக்குறள் பாட சுவீஸ் நாட்டில் கவித் கவிதாசன், பிரான்ஸ் நாட்டில் ரண்ணியா ரவீந்திரன், பேச்சுக்காக சுவீஸ் நாட்டில் இருந்து ஆஷா ராமச்சந்திரன் 'என் முதல்மொழி தமிழ்' என்ற தலைப்பில் சிறப்பாக உரையாடினார். அத்துடன் சிறுவர் நிகழ்வு யாவும் நிறைவுற்றது. வரவேற்புரை வழங்க சுவீஸ் நாட்டில் இருந்து கவிஞர். சரளா விமலராஜா உரையாற்றினார். பெரியவர் உரை ஜெர்மனியில் இருந்து நகுலா சிவநாதன் 'தன்னம்பிக்கை' என்ற தலைப்பில் சிற்றுரை யாற்றினார். அடுத்து தலைமையுரையாற்ற வந்த, அமைப்பின் தலைவர் 'பாவலர். எல்ல. கிருஷ்ணமூர்த்தி (சிங்கப்பூர்) 'பொழில் பற்றியும், விருந்தோம்பல் பற்றியும் சிறப்பாக உரை ஆற்றினார்.தொடர்ந்து இந்தியாவில் இருந்து பேராசிரியர் முனைவர் தமிழ்ச்செல்வி 'தமிழ் நிகண்டுகள்’ பற்றி விளக்கம் கூறினார். அதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலிருந்து ரமேஷ் (முதுகலை தமிழாசிரியர்) அருமையான கிராமியப் பாடலை தந்து அனைவரையும் மகிழ்வித்தார். மற்றும் ஜெர்மனியிலிருந்து ஊடகவித்தகர் க.கிருஷ்ணமூர்த்தி “ஜெர்மனியில் தமிழர் வாழ்க்கை”என்ற தலைப்பில் சிற்றுரை, சுவீஸ் நாட்டில் இருந்து மூர்த்தி செல்லையா' தமிழிலே நல்வார்த்தை' உரையாடலைத் தொடர்ந்து சுவீஸ் நாட்டில் இருந்து இளம் கவிஞர் அனோத்ஜீவ் அழகான ஒரு கவிதையை தந்து செல்ல, சுவிஸ் நாட்டில் இருந்து' தமிழும் நானும்”என்ற தலைப்பில் பத்மாஜனதேவி தர்மராஜ் உரையாடிச் செல்ல, நன்றியுரை பிரியா மூர்த்தி விளங்கியதுடன் நிகழ்ச்சியை நேரலையில் ஒலிபரப்பிக்கொண்டு இருந்த பிரான்ஸ் நாட்டு அன்பொலியும், ஜெர்மன் தமிழருவி வானொலியும் ஓலிபரப்பிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சிகள் யாவும் இரவு 7 மணியளவில் நிறைவு பெற்றது.– தினமலர் வாசகி சரளா விமலராசா

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us