துபாயில் பிரபல எழுத்தாளர் தக்கலை பஷீருக்கு வரவேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் பிரபல எழுத்தாளர் தக்கலை பஷீருக்கு வரவேற்பு

நவம்பர் 21,2020 

Comments

துபாய் : துபாய் அல் கிசஸ் பொன்னுசாமி உணவகத்தில் பிரபல எழுத்தாளர் தக்கலை பஷீருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா அல்ஹாஹ் முஹம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தக்கலை பஷீரின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். ஏறத்தாழ 16 நூல்களுக்கும் அதிகமாக படைத்து இலக்கிய ஆர்வலர்களுக்கு விருந்தளித்து வருபவர் தக்கலை பஷீர். சென்னை கிரசெண்ட் கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்த அனுபவம் உள்ளவர். ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக சிறப்பான சேவைகளை செய்து வருகிறார். அவரை துபாய் நகரில் கவுரவிப்பது சிறப்புக்குரியது என்றார். அதனையடுத்து முஹம்மது மஹ்ரூப் எழுதிய அறிந்த ராகங்கள், ஆன்மீக கானங்கள் என்ற நூலும், மஸ்னவி ஷரீஃப்பின் தமிழாக்கமும் வழங்கப்பட்டது. ஏற்புரை நிகழ்த்திய தக்கலை பஷீர் இது போன்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தமைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தன்னிடம் பயின்ற மாணவர்கள் சிலரை துபாயில் சந்தித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். முஹம்மது மஹ்ரூப்பின் பணிகள் சிறப்புக்குரியது என்றார். இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை முஹம்மது சலீம் , சென்னை ஜலால், முதுவை ஹிதாயத், ஜாபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். -- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us