குவைத் : குவைத் நாட்டின் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் உடன் இந்திய முஸ்லிம் சங்கம் (ஈமான்) நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்புக்கு இந்திய முஸ்லிம் சங்க தலைவர் சம்வேல் பர்வேஸ் தலைமை வகித்தார். மேலும் சங்க துணைத் தலைவர் சரபுதின், பொதுச் செயலாளர் ஜாபர் சாதிக், இளைஞர் பிரிவு தலைவர் ரியாஸ் அகமது, இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் இம்ரான் ஜஸ்ட்நைக், ஹசன் நூர், ஜாவெத் அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்திய முஸ்லிம் சங்க தலைவர் சம்வேல் பர்வேஸ் தலைவர் புதிய தூதருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், கொரோனா பாதிப்பு சமயத்தில் தங்களது அமைப்பு மேற்கொண்ட பணிகள் குறித்தும் விவரித்தார்.
-- நமது செய்தியாளர் காஹிலா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.