தாலாஸ் Fort Worth இந்துக் கோயிலில் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நவம்பர் 15 ம் தேதி துவங்கிய கந்தகஷ்டி விழாவில் முருகப் பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான நவம்பர் 20 அன்று நடைபெற்றது. மகாலிங்க குருக்கள், நாள்தோறும் அழகுற அலங்காரங்கள் மற்றும் பூஜைகளை செய்திருந்தார். பாலா, திருமதி.மகாலட்சுமி மற்றும் அவர்களின் நண்பர்கள் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாக செயலாற்றினர்.சூரசம்ஹாரதன்று முருகன் வேடம் அணிந்த சிறுவன், சூரனின் தோல்பாவையுடன் போரிட்ட போது, பக்தர்கள் அனைவரும் 'அரோகரா' என கோஷம் எழுப்பியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து சிறிய தேர் போன்ற அமைப்பில் முருகப் பெருமான், ஆலய வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மிகக் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கந்தசஷ்டி விழாவின் அனைத்து நாள் நிகழ்வுகளும், சூரசம்ஹார நிகழ்வும் ஆலயத்தின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.