பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தேசத்தில் இயங்கி வரும் அன்னை தமிழ் மன்றம் (உலக தமிழ்ச்சங்கம் பதிவு எண் UTS/WD 105) பல்வேறு சமூக நற்பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 20ம் தேதி சித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சுல்ப் கம்பெனியின் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கிம்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது பல்வேறு நாட்டினரும் கலந்து கொண்டு மருத்துவ உதவிகளையும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.கொரோனா நோய் தோற்று காலத்தை முன்னிட்டு பஹ்ரைன் அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இம்முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்புடன் நடைபெற்ற இம்முகாமில் குருதிக்கொடையாளர்கள் குழுவிற்கான சின்னத்துடன் கூடிய பிரதியாக உதவி அலைபேசி எண் வெளியிடப்பட்டது.அவசரமாக குருதி தேவைப்படுபவர்கள் 38856788 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.முகாமின் முடிவில் சித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப், சுல்ப் கம்பெனியின் தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகிகளுக்கு அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் நன்றி தெரிவித்தார். அன்னை தமிழ் மன்றத்தின் பல்வேறு சமூக சேவைகளுக்கு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.– நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.