தாலாஸ் Fort Worth இந்துக் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 15 ம் தேதி துவங்கி, நவம்பர் 20 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருக வேண்டினர். நாள்தோறும் கந்தசஷ்டி கவசம், கந்த அனுபூதி ஆகியன பாராயணம் செய்யப்பட்டது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான நவம்பர் 20 அன்று சூரசம்ஹார வைபவம், பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 21 ம் தேதி வள்ளி–தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்புற நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. திருக்கல்யாணத்தின் போது குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முருகன் திருக்கல்யாண வைபவத்தை ஏராளமானோர் ஆலயத்தின் முகநூல் பக்கத்தில் நேரலையாக கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் சிறப்புற செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.