ஹபரோனி: ஸ்ரீ முருக பெருமானுடன் வள்ளி–தெய்வானை திருமண நிகழ்ச்சி, போட்ஸ்வானா ஹபாரோனியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. போட்ஸ்வானா, ஹபாரோனியில் உள்ள ஸ்ரீ பாலாஜி திருக்கோயில் கடந்த 2007ம் ஆண்டு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய பட்டது. இந்த கோயிலில் ஸ்ரீ பாலாஜி முதன்மை தெய்வமாக இருந்து அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஐயப்பன், சிவ பெருமான், விநாயகர், ஸ்ரீ வைஷ்ணவ தேவி, ஸ்ரீ ஆஞ்சநேயர், முருகன் வள்ளி தெய்வானை மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி கருவறைகள் உள்ளன. இங்கு வருடம் முழுவதும் அனைத்து தெய்வங்களுக்கும் அனைத்து பூஜைகளும் முறையாக தங்கு, தடை இல்லாமல் நடத்தப்படுகிறது. இக்கோவிலுக்கு இந்த வருடம் ஏப்ரலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்படும் புனருத்தாரண கும்பாபிஷேகமும், கொரோனா கட்டுப்பாடுகளுக்கிடையே, ஆகம விதிகள் மாறாமல் முறைப்படி செய்யப்பட்டது.இங்கு இந்த வருடமும் கந்த சஷ்டி விழா முறையாக ஆறு நாட்களுக்கு, நவம்பர் 15 ம் தேதியிலிருந்து 20 ந் தேதி வரை, சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா முடிவில், நவம்பர் 20 ந் தேதி சூரசம்ஹாரமும், அதனை தொடர்ந்து 21 ந் தேதி வள்ளி–தெய்வானை திருமணமும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. போட்ஸ்வானாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லை என்றாலும், சமூக பரவலை தடுக்க போட்ஸ்வானா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதன்படி இது போன்ற விழாக்களுக்கு 50 நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற கட்டுப்பாட்டை மதித்து, பக்தர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கலந்து கொண்டு முருகப் பெருமானை வணங்கி அருள் பெற்று சென்றனர்.– நமது செய்தியாளர் மு.செல்வராஜ் பிரபு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.