லேகோஸ் : லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீபாவளி அன்று காப்பு கட்டுதலில் தொடங்கி நவம்பர் 21ம் தேதி சனிக்கிழமை சூரசம்ஹாரம், நவம்பர் 22ம் தேதி திருக்கல்யாண வைபவம் வரை கந்தசஷ்டி மஹோத்சவம் மிக உற்சாகமாக நடைபெற்றது. தினமும் இரண்டு கால பூஜை, சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவச பாராயணம், வித விதமான (மொத்தம் 12) அலங்காரங்கள் என ஓயாமல் ஒவ்வொரு பக்தருக்கும் அருள் பாலித்தார். முதல் முறையாக தமிழ் குழந்தைகளும் ஶ்ரீ கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தது இவ்வைபவத்தின் சிறப்பு அம்சமாகும். கோயில் முழுமையாக திறக்கப்படாத நிலையில் அனைத்தையும் சிரத்தையுடன் சிவகுமார் சிவாச்சாரியார் மற்றும் ஆலயத்தின் மற்ற பூசாரிகள் செய்ததற்கு லேகோஸ் வாழ் தமிழர்கள் அவர்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.– நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.