சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா

நவம்பர் 23,2020 

Comments

நாற்பதாண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது முத்திரைத் திருவிழாவான கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் 22 ஆம் தேதி இணையவழி மெய்நிகர் நிகழ்ச்சியாக – கவிதாஞ்சலி – கண்ணதாசன் விருது வழங்கும் நிகழ்வு – பாட்டுத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பாடல்கள் – சிறப்புரை என நேரடியாக நடைபெறுவதற்குச் சற்றும் சுவை குறையாமல் கோலாகலமாக நடத்தியது. கழகத் தலைவர் சுப.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இவ்விழா செல்வியர் ஜனரஞ்சனி ஞானப் பிரகாசம் – ஜனரக்ஷமி ஞானப்பிரகாசம் ஆகியோரின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. கவிஞர் தங்க வேல்முருகன் கவிதாஞ்சலி படைத்தார். கவியரசரின் பாடல்களைப் பாடும் பாட்டுத் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பாடல் அடுத்த அங்கமாக இடம் பெற்றது. போட்டி 6 – 14 வயதுக்கு உட்பட்டவர் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்டவர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இவைகளில் முதற் பிரிவான 6 – 14 வயதுக்குட்பட்டவர்களில் மூவருக்கு ஆறுதல் பரிசுகளும், ரோஷன் பரத்வாஜ் முதற் பரிசும், தனிஷ்கா இரண்டாவது பரிசும், தமிழினி மூன்றாவது பரிசும் பெற்றனர். அடுத்த பிரிவில் மூவர் ஆறுதற்பரிசும், லட்சுமி ரவி முதற் பரிசும், மிருணாள் நாராயணன் இரண்டாவது பரிசும், கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாசன் மூன்றாவது பரிசும் பெற்றனர். இவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முத்தாய்ப்பு நிகழ்வாக இவ்வாண்டுக்கான கண்ணதாசன் விருது பெற்றவரை செயலாளர் கிருத்திகா அறிவித்து அறிமுகப்படுத்தினார். நாடகம் – சிறுகதை – கவிதையிற் புலமை பெற்ற 40 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளுவர். அடுத்த ஆண்டிலிருந்து பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குபவர்களும் இதில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டுக்கான கண்ணதாசன் விருது கலைவாணி இளங்கோ பெறுவார் என்பதைப் பலத்த கரவொலிக்கிடையே செயலாளர் அறிவித்தார். இவருக்கு இரண்டு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் பட்டயத்தை சிறப்பு விருந்தினர் தேசிய நூலக வாரியத் தமிழ்ப் பிரிவுத் தலைவர் து.அழகிய பாண்டியன் வழங்கி கவுரவித்தார். விருதாளர் தக்க வகையில் ஏற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினர் கவியரசு பற்றிய தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். திரைப்பட இயக்குநர் - குணசித்திர நடிகர் தம்பி இராமையா “ நான் நிரந்தரமானவன் – நான் நிரந்தர மாணவன் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவர் தமதுரையில் கண்ணதாசன் பாடல்களை இசையோடு பாடி கவிஞரின் பாடல் தத்துவ விளக்கங்கள் – சீர்திருத்தக் கருத்துக்களை விளக்கியதுடன் “ எப்படி வாழக்கூடாது என்பதற்கு நானே உதாரணம் “ என்று கூறிய கவிஞரின் சுயசரிதையை வியந்து பாராட்டினார். முடிவுரையாக திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையைக் குறிப்பிட்டு மூத்தோரை – 60 வயதினரை அரவணையுங்கள் – ஆண்டவன் உங்கள் இல்லம் நோக்கி வர நினைப்பார் . 70 வயதினரை வருடிக் கொடுங்கள் – ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பார். – 80 வயதினரைக் கட்டியணைத்து உபசரியுங்கள் உங்கள் இல்லத்திலேயே ஆண்டவன் தங்கி விடுவார் என உருக்கத்தோடு கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்வினை தமிழ்ச்செல்வி நெறிப்படுத்தினார். முன்னதாக கிருத்திகா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து 22 ஆண்டுகளாக எழுத்தாளர் கழகம் நடத்தி வரும் இவ்விழா கவிஞர் கோ.இளங்கோவன் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து 100 பேர் மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத் தகுந்ததாகும். “ யூ டியூப்வழியும் நிகழ்வு ஒளி – ஒலி பரப்பானது.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us