வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் நவம்பர் மாத இலக்கியக் கூட்டம் நவம்பர் 21 ம் தேதி நடைபெற்றது. இந்த மாத தலைப்பு 'குளிரடிக்கம் சங்ககாலம்'. இதில் இம்மாத சிறப்பு விருந்தினராக திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி கலந்து கொண்டு இலக்கிய பேருரை ஆற்றினார். இணைய வழியில் நடைபெற்ற இந்த இலக்கியக் கூட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இந்நிகழ்வானது வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் முகநூல் மற்றும் யூட்யூப் தளங்களில் நேரலை செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.