மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் Brickfields பகுதி ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நவம்பர் 15 ம் தேதி துவங்கி நவம்பர் 21 ம் தேதி வரை கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்பட்டது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாள்தோறும் முருகப் பெருமானுக்கு ருத்ர அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் 6 ம் நாளான நவம்பர் 20 அன்று சூரசம்ஹாரமும், 7 ம் நாளான நவம்பர் 21 அன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. திருக்கல்யாணத்தன்று விரத பாரண பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வள்ளி–தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வைபவத்தின் போது உபயதாரர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கந்தசஷ்டி விழாவின் நிறைவாக நவம்பர் 24 அன்று வைரவர் பொங்கல் நடைபெற்றது. கந்தசஷ்டி விழாவின் அனைத்து நாள் நிகழ்வுகளும் ஆலயத்தின் முகநூல் பக்கத்தில் பக்தர்களின் வசதிக்காக நேரலை செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.