அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடக்கம்

நவம்பர் 26,2020 

Comments

உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center - BIDMC) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.


'Sadhguru Center for a Conscious Planet' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய உள்ளது. பெத் இஸ்ரேல் மையமானது ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும் தன்னார்வலர்களை கொண்டு தியானப் பயிற்சிகள் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக ஏற்கனவே ஆய்வு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்த பிரத்யேக மையத்தின் மூலம் மருத்துவம் மற்றும் சிந்தனை அறிவியலை ஒருங்கிணைத்து (Medical and Contemplative sciences) எங்களுடைய நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய உள்ளோம். சத்குருவின் பெயரில் இம்மையத்தை தொடங்கி இருப்பதை பெருமையாக கருதுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us