ரியாத்தில் தமுமுக நடத்திய ரத்ததான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியாத்தில் தமுமுக நடத்திய ரத்ததான முகாம்

நவம்பர் 26,2020 

Comments

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ரியாத் மண்டல தமுமுக குர்நாதா மற்றும் நஸீம் கிளை மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 20/11/2020, வெள்ளிக்கிழமை அன்று குர்நாதா பகுதியில் உள்ள கஃர்ணி பள்ளி வளாகத்தில் நடமாடும் இரத்த வங்கி வாகனம் மூலம் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. இரத்ததான கொடையாளர்களுக்கும் , களப்பணியாளர்களுக்கும், இரத்தவங்கி ஊழியர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு, தேநீர், பழச்சாறு , தண்ணீர் மற்றும் பாதுகாப்பு முக கவசம் போன்றவைகளை முகாமின் களப்பணியாளர்களாக செயல்பட்ட தலைமை நிர்வாகிகள் , அணி நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து விநியோகம் செய்தனர்.இந்த இரத்ததான முகாமில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள் பங்கேற்று இரத்ததானம் வழங்க முன் வந்தனர், மேலும் சிலர் காத்து இருக்க உரிய நேரம் கிடைக்காமல் தானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பினார்கள். இந்த இரத்ததான முகாமிற்கு மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது , மண்டல பொருளாளர் ஜர்ஜீஸ் அஹமது , மண்டல மமக செயலாளர் ஆரூர் நிசார் அலி , மண்டல துணைத் தலைவர் செங்கோட்டை அப்துர் ரஹீம் , மண்டல மக்கள் தொடர்பாளர் திருக்கோவிலூர் ஷாக்கிர் பேக் மற்றும் தலைமை நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்க, இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளரும் மண்டல சமூகநலத்துறை துணைச் செயலாளருமான அறந்தை சித்திக் , ரியாத் மண்டல மருத்துவரணி செயலாளர் மங்களகுடி தாஹா ரசூல் ,மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.ரியாத் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சாகுல் ஹமீது , ரியாத் தமிழ் அமைப்பு பிரமுகர் சுரேஷ் குமார் , சமுதாய ஆர்வலர் சேலம் நூர் ஆகியோர் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் தங்களுடைய இரத்தத்தையும் தானமாக வழங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரத்ததானம் வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக பாராட்டு சான்றிதழும் , பரிசுப்பையும் வழங்கப்பட்டது. அதே போன்று இரத்த வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்பை பெருமைபடுத்தும் விதமாக இரத்தவங்கி ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க துவாவுடன் முகாம் இனிதே நிறைவடைந்தது.– தினமலர் வாசகர் சிராஜ்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us