கனடா நாட்டில் இயங்கும் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கூடி கனடாத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஆரம்பித்தன. இதன் தொடக்க நிகழ்வு 23.11.2020 அன்று நடைபெற்றது. தமிழ்த்தேசிய பேரிக்க தலைவர் பெ.மணியரசன் வாழ்த்துரை நிகழ்த்தி தொடக்கி வைத்தார். 'நெல்சன் மண்டேலாவை சிறைப்படுத்தி கறுப்பின மக்களுக்கெதிராக இனப்படுகொலை நிகழ்த்திய தென்ஆபிரிக்கா அரசை உலகநாடுகள் தனிமைப் படுத்தின. இந்தியா கூட அந்நாட்டுடன் விளையாட்டு போட்டி நிகழ்த்த தடைவிதித்தது. அதுபோன்று தமிழினப் படுகொலை புரிந்த இலங்கை அரசை உலக நாடுகள் தூதரக தொடர்புகளைத் துண்டித்து தனிமைப் படுத்தவேண்டும். தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும்.' என தனது தொடக்க உரையில் பெ.மணியரசன் கேட்டுக் கொண்டார்.இணையம் வழியாக நடைபெற்ற இந்நிகழ்வில் கனடா, தமிழகம், அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து தமிழர்கள் பங்குபெற்று இருந்தனர். நிகழ்வின் இறுதியில் பல கனடியத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துரை வழங்கினர். – தினமலர் வாசகி ராஜி பற்றாசன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.