வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 37 வது மாதாந்திர நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் 37 வது மாதாந்திர நிகழ்ச்சி

நவம்பர் 26,2020 

Comments

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் 37 ஆவது மாதாந்திர நிகழ்ச்சி கடந்த 21-11-2020 (சனிக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது.வழக்கமாக, பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றுவரும் மாதாந்திர நிகழ்ச்சி, சமீபத்திய கொரோனா தொற்று காரணமாக இணையம் வழியாக நடைபெற்றது. ‘வாழ்க நிரந்தரம்’ என்ற தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. ‘அழகிய மயிலினில் ஆடிவா முருகா’ என்ற பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சிவாணி சசிக்குமார். ‘சக்தி சகித கணபதிம்’ என்ற மற்றொரு பாடலோடு வந்தார் ஷான்வி சஞ்சனா. மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற இணையம் வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் சரவணன்.சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில், சங்கீத பாடங்களை வழங்கினார் பைந்தமிழ் ஸ்ரீ. ’நீண்ட நீண்ட காலம்’ என்ற பாடலை அழகாகப் பாடினார் செந்தமிழ். அக்ஷட் வெங்கட் தீபாவளியை பற்றி அழகுறப் பேசினார். ஜீவஜோதிகா, சிலப்பதிகாரத்தில் காடுகாத்தான் காதையில் வரும் சில பாடல்களை வழங்கினார்.சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி “நிழல்” என்ற தலைப்பில் அறிமுகவுரை வழங்கினார். பட்டினப்பாலை என்ற நூலில் வரும் நிழல் மற்றும் வேறு சில இலக்கியங்களீல் வரும் நிழல் பற்றிய வரிகளை குறிப்பிட்டு தற்கால நிழற்படம் எடுக்கும்போது வரும் சூழநிலைகளை விவரித்தார். தொடர்ந்து, திருச்சியிலிருந்து கலந்துகொண்ட முனைவர் அமிர்தகடேஸ்வரர் ‘வினைக்கேற்றச் சொற்கள்’ என்ற தலைப்பில் தமிழ் இலக்கியவாதிகள் கடைபிடிக்க தவறும் பல பிழையான சொற்களை விவரித்தார். சொற்கள் வினைக்கேற்ப எவ்வாறு மாறுபடுகிறது என்றும் விவரித்தார்.கும்பகோணத்திலிருந்து முனைவர் இலக்கியத்தோழன் ப.பெ.கலியமூர்த்தி ‘சங்க இலக்கியம் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிங்கப்பூரிலிருந்து இரமேஷ், சசிக்குமார் மற்றும் எ.வெங்கடாசலபதி ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.இணையம் வழி சிங்கப்பூர், இந்தியா என பல்வேறு நாடுகளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார் குமரவேல்.நிகழ்ச்சியின் காணொளியை முகநூல் வழியாக நேரலையாகவும் ஒளிபரப்பி வந்தனர் ஆசிரியை மஹாஜபீன் மற்றும் குமரேசன்.இல்லத்தில் இருந்தபடி நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, தமிழ் ஆர்வலர்கள் சரவணன் மற்றும் குமரவேல் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்த சிறப்பான நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us