பஹ்ரைன் : பஹ்ரைன் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய அரசியலமைப்பு சாசன தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பிஓச் ஸிரிவாஸ்தவா தலைமை வகித்தார். அவர் இந்திய அரசியலமைப்பு சாசன உறுதிமொழியை வாசிக்க இந்திய தூதரக ஊழியர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய பள்ளிக்கூட முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். -- நமது செய்தியாளர் காஹிலா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.