குருமகானின் கார்த்திகை தீப ஒளி திருநாள் அருளுரை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குருமகானின் கார்த்திகை தீப ஒளி திருநாள் அருளுரை

நவம்பர் 28,2020 

Comments

கார்த்திகை தீபத்திருவிழா ஒளிவடிவமான பரம்பொருளைப் போற்றும்தத்துவங்கள் நிறைந்த பண்டிகை. இறைவன் சோதிமயமானவன், ஒளியாய்இருக்கும் உன்னத சக்தி என்பதை உலகிற்கு உணர்த்தி, உள்ளத்தில் நிறுத்தி,எங்கும் பிரகாசமாய் விளங்கும் இறைவனை வணங்கி எல்லாவித நன்மைகளும்பெறுவோம் என்பதே கார்த்திகை தீபத் திருநாளின் சிறப்பு.


மன இறுக்கத்தை தளர்த்தும் சக்தி பண்டிகைகளுக்கே உண்டு. பண்புநலன்களை மக்களிடம் வளர்ப்பது பண்டிகைகளே. அவ்வகையில் கார்த்திகைதீபத் திருநாள் மகத்தான பண்டிகையாகக் கருதப்படுகிறது.


நான்முகனும், திருமாலும் அடிமுடி தேடியபோது சிவபெருமான் சோதிப் பிழம்பாக,தோன்ற அவரது அடியையும், முடியையும் காண முடியாமல், உணர்ந்துவணங்கிய போது சோதி பிழம்பை கண்டு தரிசித்தனர். தாங்கள் தரிசித்தஅற்புத ஜோதியை உலக உயிர்கள் யாவும் தரிசிக்க அருள்புரியும்படிவேண்டினர். அங்ஙனம் சிவபெருமான் அருள் பாலித்த தினமே கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.


எவ்வளவுதான் அறிவைப் பெற்றிருந்தாலும், பொருளாதாரத்தில் உயர்வைபெற்றிருந்தாலும் உண்மையை உணர்ந்து சரணாகதி அடைவதே எல்லாநலன்களையும் அருளும் என்பதை தீபத்திருவிழாஉணர்த்துகிறது. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்றுகூறப்படுவதை உணர்ந்து ஒவ்வொருவரும் தம்மிடமுள்ளதேவையில்லாதவைகளை தீபத்தரிசனத்தில் எரித்து தீப ஒளிபோல் சுடர்விட்டுபிரகாசியுங்கள். எச்செயலை செய்யும்பொழுது அது உணர்ந்த நிலையில்செய்யப்பட்டால் அதன் பலன் முழுமையாக கிடைக்கும்.


உடம்பே ஆலயம். உள்ளே ஒளிரும் சுடர்தான் ஆன்மா. ஆன்மவிளக்குஒளிர்வதாலேயே அகிலமெல்லாம் இயங்குகின்றன. நாம் விளக்கு ஏற்றுவதற்குஊற்றப்படும் எண்ணையும், அதில் இடப்படும் திரியும், தன்னை கரைத்துக்கொண்டு, நமக்கு பிரகாசமான ஒளியைத் தருவது போல் உலக மக்களும்தன்னலம் பாராமல் மக்களுக்கு ஆற்றும் சேவையே மகேசன் சேவை என்றுதங்களை பொதுக் கடமைகளில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றதத்துவத்தை கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.


கார்த்திகை தீபத்தின் ஒளியானது யார் மீதெல்லாம் படுகிறதோஅவர்களுக்கெல்லாம் மறுபிறவியில்லை என்று கூறப்படுகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும்பொருந்தும்.


தீபதரிசனம் என்பது நம்மை நாம் கண்டு கொள்ளும் தத்துவத்தைஉணர்த்துவதாகும். பிண்ட ஒளி (உடலிலே காணும் ஒளி ) அண்ட ஒளி(சூரிய சந்திர ஒளி ) அகண்ட ஒளி ( பரசிவத்தின் ஒளி) என்னும் இந்த மூன்றுஒளியும் கூடுகிற (லயமாகிற) இடம்தான் திருவண்ணாமலை.


பிண்ட ஒளி சூரியனில் ஒடுங்கும். சூரிய ஒளி பரசிவ ஒளியில் ஒடுங்கும். இதுபிரணவ கால ஒடுங்கு முறையாகும்.


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம்,அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.


திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் உலகத்தை எல்லாம் இயக்குகின்றபரம்பொருள் உள்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தைஉணர்த்துகிறது.


இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில்அழித்து உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியை காண்பது தான் இந்ததீபதரிசனம். தீபத்தை வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்கவல்லது என்ற ஐதீகத்தை உணர்ந்து நீங்கள் தீப ஒளிச்சுடராக பிரகாசிக்கபரிபூரண நல்லாசிகள்.


சிறப்பு மிக்க மனிதப் பிறவியை எடுத்துள்ள ஒவ்வொருவரும் கார்த்திகை தீபத்திருவிழா உணர்த்தும் உண்மைகளை உணர்ந்து, உங்களின் பிறப்பின்உண்மைகளை உணர்ந்து, நீங்கள் ஒவ்வொருவரும் எல்லாம்வல்ல இறையின்அம்சம் என்பதை உணர்ந்து வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீங்கள் சிறப்புபெறபரிபூரண நல்லாசிகள்.

– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us