சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் புத்தகப் பரிசளிப்பு விழா

நவம்பர் 30,2020 

Comments

  சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் கடந்த பத்து ஆண்டுகளாக ஆனந்த பவன் உணவகத்துடன் இணைந்து நடத்தும் “ ஆனந்தபவன் மு.கு.இராமச்சந்திரா நினைவுப் புத்தகப் பரிசளிப்பு ” விழா இணையவழி நிகழ்வாக நவம்பர் 28 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் சுப.அருணாசலம் தலைமை ஏற்றார். நித்யஸ்ரீ ஷ்யாம்குமார் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது.


ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை – கட்டுரை – கவிதை நூலுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. சுழற்சி முறையில் நடைபெறும் இப்பரிசு இவ்வாண்டு சிறந்த கவிதை நூலுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாண்டு நடுவர்களாக சிங்கப்பூரிலிருந்து பேராசிரியர் ஆ.ரா.சிவக்குமாரன் , இந்தியாவிலிருந்து கவிஞர் தங்கம் மூர்த்தி , மலேசியாவிலிருந்து கவிஞர் பச்சைபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். 12 கவிதை நூல்கள் போட்டிக்கு வந்தன. இவைகளை ஆய்ந்து ஒருமனதாக சிங்கப்பூர் மூத்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எழுதிய “ அங்குசம் காணா யானை “ என்ற நூலைப் பரிசுக்குரிய நூலாக நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர். இவருக்கு அமரர் மு.கு.இராமச்சந்திரா நினைவுப் பரிசாக 2000 சிங்கப்பூர் வெள்ளி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. பரிசு பெற்ற கவிஞர் பொன்னாடை – மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். 


ஆனந்தபவன் உணவக உரிமையாளர் பானுமதி இராமச்சந்திரா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து கவுரவித்தனர். பரிசு பெற்ற கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ தக்க வகையில் ஏற்புரை நல்கினார். நடுவர்கள் சார்பில் தமிழறிஞர் ஆ.ரா.சிவக்குமாரன் போட்டிக்கு வந்த நூல்கள், பரிசுக்குரிய நூல் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான விளக்கமளித்து உரையாற்றினார்.


விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக முனைவர் சித்ரா சங்கரன் சிறப்புரை ஆற்றுகையில், சிங்கப்பூரில் தமிழ் நூல்கள் பதிப்பு அமைப்பு முறை பற்றியும் சர்வ தேச நடைமுறை பற்றியும் எடுத்துரைத்தார். சிங்கையை மையப்படுத்தி, சிங்கையின் வரலாற்றுச் சூழலை உலகின் முன் நிலை நிறுத்தும் வண்ணம் நூல்கள் அமைய சிறந்த ஆலோசனையை வழங்கினார். சென்ற பத்து ஆண்டுகளாகப் பரிசு பெற்றவர்களைப் பற்றிய காணொளியும் திரையிடப்பட்டது. பொருளாளர் கண்ணப்பன் நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது. முன்னதாக செயலாளர் கிருத்திகா வரவேற்புரை ஆற்றினார். பிரேமா மகாலிங்கம் நிகழ்வினைச் சுவைபட நெறிப்படுத்தினார். நிகழ்வு யூ டியூப் வழியும் காட்சிப்படுத்தப்பட்டது.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us