லேகோஸ் : லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 10ம் ஆண்டு வருஷாபிஷேகம் 29.11.2020 அன்று காலை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 108 சங்கு வைத்து அதில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிவகுமார் சிவாச்சாரியார் மிகவும் திறம்பட அனைத்து ஏற்பாடுகளையும் தனித்து செய்தது குறிப்பிடத்தக்கது. அதோடு மாலை திருக்கார்த்திகை தீப வழிபாடும் சிறப்பாக நிகழ்ந்தது. அதிலும் 108 அகல் தீபம் ஏற்றி, தீப ஜோதியில் கோயில் வளாகம் மின்னியது புகைப்படங்களில் பார்க்க முடிந்தது. இந்த தீபங்கள் அனைவருக்கும் அன்பு, அறிவு, ஆரோக்கியம், தனம், தானியம், பக்தி, பாதுகாப்பான சமூகம் என அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டி ப்ரார்தனை செய்யப்பட்டது.- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.