அவதார் அவார்ட்ஸ் விருதுக்கான சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். யோகநாதன் கிருஷ்ணசாமி பற்றி அவதார் அவார்ட்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பில்...
பல சாதனைகளை வெற்றிக்கிரீடமாக அணிந்து வரும் யோகநாதன் கிருஷ்ணசாமி வாழ்க்கை பாதை மானிடருக்கு உதாரணமாக அமைகிறது. தமது ஆரம்ப கல்வியை பேரா, ஈப்போவிலுள்ள தேசிய மாதிரி குரு கல்கிதார் பள்ளியில் தொடங்கிய நாள் முதல் சுறுசுறுப்பான துடிப்புமிக்க நேர்பார்வை மிக்க மாணவனாக துளிர்த்து வந்தார். தமது உயர் தகைமை பண்புகள், தனித்திறமை, தனித்துவ உயர் இயல்பு, ஆகியவை முன் நிற்க பள்ளியின் மாணவர் தலைவராக நியமனம் பெற்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தமது இடைநிலைக்கல்வியை எஸ்.எம்.கே தேசிய மாதிரி இடை நிலைப்பள்ளியில் தொடர, மாணவர் தலைவர்களின் பிரதான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி மாணவர் தலைவர்கள் போர்டில் தொடர்ச்சியாக ஐந்தாம் படிவம் கல்வி ஆண்டு வரை பொறுப்பேற்றிருந்தார். காற்பந்தாட்டம் மிதிருந்த பற்று, வேட்கை,ஆர்வம் பள்ளி நாட்கள் முதல், கேப்டன் மற்றும் தற்காப்பு விளையாட்டாளராக, ஆரம்ப பள்ளி, இடை நிலைப்பள்ளி, பல்கலைக்கழகம் வரையிலும் இன்றும் முன்னணி விளையாட்டாளராக திகழ்கின்றார்.
பள்ளியின் மாணவர் ஆலோசனைக்குழு கிளப், பள்ளி தார்மீக பண்புகள் கிளப், பள்ளி விஞ்ஞான கிளப், ஆகிய கிளப்-புகளின் தலைவராக பொறுப்பு ஏற்றார். 1997-ம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் மிக சிறப்பாக முதல் தரத்தில் தேர்வு பெற்றமையால், மிகவும் புகழ்மிக்க உயர்தரமிக்க பேரா-வில் உள்ள ஈப்போ சேயின்ட் மைக்கல் இன்ஸ்டிட்டியூஷன் பள்ளியில் 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் ஆறாம் படிவம் கல்வி கற்க வாய்ப்பு பெற்றார். ஆறாம் படிவம் தேர்வில் மிக சிறப்பான தேர்ச்சிகள் பெற்றதன் விளைவாக, வட மலேசிய யூனிவர்சிட்டியில்(யூ.யூ.எம்) 2000-ம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து, 2003-ம் ஆண்டு “சர்வதேச விவகாரம் மேலாண்மை” துறையில் இளம்கலை பட்டம் பெற்றார்.
ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தில் படிவம் ஒன்று முதல் படிவம் 5 வரையிலான மாணவர்களுக்கு வரலாற்று பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணிபுரிந்தார். 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மின்கடத்தி பொருள்(செமி கொன்டக்டர்) உற்பத்தி நிறுவனத்தில் உற்பத்தி பொறியாளராக நிரந்தர வேலையில் அமர்ந்தார். உற்பத்தி நிறுவனத்தில் தமக்கு கீழ் பணிபுரியும் 120 முதல் 125 வரையிலான பணியாளர்களை கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி வழி நடத்துபவராகவும் பணிபுரிந்தார். இரண்டு ஆண்டுகளில் திரு.யோகா, மூத்த உற்பத்தி பொறியாளராக பதவி உயர்வு பெற்று, நிறுவனத்தின் மூன்று நேரப் பகுப்புகளுக்கு(ஷிஃப்ட்) மேலாளராக பொறுப்பேற்று, அமெரிக்கா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லந்து, இந்தியா போன்ற சர்வதேச வாடிக்கையாளர்களுடன், நிறுவனம் சார்பாக தொடர்பு கொண்டு விற்பனை மேம்படுத்தும் பொறுப்பு வகித்தார்.நவம்பர் 2007-ல் குமாரி யமுனா ராமலு-வை திருமணம் செய்து, மூன்று மகன்கள் உள்ளனர்.
ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பு வழிகாட்டுதல் துறையில் முது நிலை பட்டப்படிப்பை (Kursus Perguruan Lepasan Ijazah-KPLI)-ல் வெற்றிகரமாக முடித்தார். மாணாக்கர்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கு நல்ல ஆலோசனைகளும் தீர்வுகள் வழங்கும் பதவியில், முதன் முதலாக பேராக், சுங்கை சிப்புட் ‘தேசிய மாதிரி(தமிழ்) மகாத்மா காந்தி கலாசாலையில் பணியில் அமர்ந்தார். ஆசிரியர் கிளப் தலைவராக இரண்டு தவணைகள் பணிபுரிந்தார். 2010 முதல் 2012 வரை, 2014 முதல் 2016 வரை. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சமுதாயம் மேம்படையும் நோக்கத்தில் புதிய செயல்திட்ட்ம், நடவடிக்கைகளை உருவாக்கும் திட்டத்தில், பள்ளியின் உருமாற்றம் குழுவில், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை திரு.யோகா முக்கிய பணிகள் ஆற்றினார். சிறப்பான மேன்மையான தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்திய திரு.யோகா, திட்டப்பணி மேனேஜராகவும் செயல்திட்ட இயக்குனராகவும் சிறப்பான சேவைகளை வழங்கினார். மலேசியாவுக்கான இந்திய தூதர், பள்ளிக்கு 2018-ல் விஜயம் செய்த போது, திரு.யோகா, நடவடிக்கை அதிகாரியாகவும் அணுக்கமாக ஒத்தியல்புடன் செயலாற்றுபவராகவும் நியமிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு மாணவர்களின் விழிப்புணர்வு அறிவுக்காக Permata Pintar New 21st Century Learning Bus ஒரு வாரத்திற்கு வரவழைத்து ஏற்பாடு செய்திருந்தார்.
பள்ளியும் மலேசிய இராணுவப் Regimen Renjer DiRaja(RRD) Ipoh, Malaysia Military Force (Angkatan Tentera Malaysia) படையும் இணைசேர்ந்து, பள்ளியின் 5-ம் ஆண்டு, 6-ம் ஆண்டு மாணாக்கர்களுக்கு பாசறை கூடார நடவடிக்கை நிகழ்ச்சிகள் ( 3 பகல், 2 இரவுகள்), 2011-ம் ஆண்டிலும், 2016-ம் ஆண்டிலும் நடைபெற செயலாற்றம் புரிந்தார். 2018-ம் ஆண்டில் பள்ளியின் 5-ம் ஆண்டு, 6-ம் ஆண்டு மாணாக்கர்களுக்கு. மூன்று பகல், இரண்டு இரவுகள் பள்ளியின் வருடாந்திர பாசறை கூடார நிகழ்ச்சி நடவடிக்கைகளை தேசிய சேவை கேம்ப்-ல், மாணாக்கர்கள் மாறுபட்ட விழிப்புணர்வு பெறும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்தார்.
தமது மனைவியின் முதுகலை படிப்பை யூ.டி.எம், ஜோகூர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதை முன்னிட்டு, 2019-ம் ஆண்டு, ஜோகூருக்கு மாற்றலாகினார். தேசிய மாதிரி (தமிழ்) தெப்ராவ் தோட்டப்பள்ளியில் பள்ளி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல், ஊக்குவிப்பு பதவியில் நியமிக்கப்பட்டார். பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு ஏதுவாக செயல்திட்ட இயக்குனராக நியமனம் பெற்றார். மற்றும் 1000 நபர்களுக்கு மேல் கலந்து கொண்ட சுதந்திர தின கொண்டாட்டம், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதில் முழு மூச்சாக பணிபுரிந்தார். கோவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில், மாணாக்கர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், சமுதாயத்தினர் ஆகியோரை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கவும், மன நிலை ஆரோக்கியமாக நிலைத்திடவும் பல ஆக்ககரமான செயல்களை முன்னெடுக்கவும் மின்னணுவியல் தொழில் நுட்பம் தகவல் தொடர்பு சாதனம் மூலம் வழிமுறைகளை செயல்படுத்தினார்.
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஊக்குவிப்பு துறையில் திரு.யோகா, அரசாங்க தேர்ச்சி சான்றிதழ் அங்கீகாரம் பெற்று, மலேசிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஊக்குவிப்பு போர்டில் பதிவு பெற்றுள்ளார். ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஊக்குவிப்பு துறையில் 2015-ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். இந்த துறையில் 2020-ம் ஆண்டு படிப்பை தொடர விண்ணப்பித்துள்ளார். மலேசிய கல்வி அமைச்சின் 2013-ம் ஆண்டு, 2018-ம் ஆண்டு சிறப்பு சேவை விருது பெற்றுள்ளார்..
கிருஷ்ணசாமி, அன்னாமேரி தம்பதிகளின் ஒரே மகனாக 7-ம் தேதி பிப்ரவரி மாதம் 1980-ல் பிறந்தார், .இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். தமது அறிவாற்றலை தொடர்ந்து உயர்த்திக்கொள்ளவும் மாணாக்கர்களின் வளர்ச்சியில் பெரும் ஆர்வம் கொண்டு சிறப்பாக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
– நமது செய்தியாளர் வெங்கடேசன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.