அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் பிரின்ஸ்டன் ஆகிய நகரங்களில் தென்னிந்திய உணவான ரசம், கோவிட் 19 வைரசை அழிக்கும் மருந்தாக மாறி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த சமையல்காரர் ஒருவரின் கைப்பக்குவத்தில் தயாரிக்கப்பட்ட தற்போது அமெரிக்காவில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் லாக்டவுன் அமலில் இருந்த சமயத்தில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அருண் ராஜதுரைக்கு(35), ரசத்தில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்களான மஞ்சள், இஞ்சி, பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதும், கோவிட் நோயாளிகளுக்கு இது பயன்படும் என்பதும் மனதில் உதித்துள்ளது.
இதனால் 3 மருத்துவமனைகளுக்கு அருண் உணவு தயாரித்து வழங்கினார். அந்த உணவில் ரசமும் இடம்பெறும்படி செய்தார். அவர் எதிர்பார்த்தபடி இது பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், நாளுக்கு நாள் அவரின் ரசத்தை விரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ரசம், அருண் பணியாற்றும் பிரின்ஸ்டன் அஞ்சப்பர் உணவகத்தில் முக்கிய உணவாகவும் மாறி உள்ளது.
நியூயார்க், நியூஜெர்சி, கனடாவின் உள்ள அஞ்சப்பர் உணவக கிளைகளில் ரசம் தற்போது புகழ்பெற்ற உணவாக மாறி உள்ளது. தினமும் 500 முதல் 600 கப்கள் ரசம் விற்பனையாவதாக கூறப்படுகிறது. ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை முதலில் வீட்டில் பரிசோதனை செய்து பார்த்தேன். ஆனால் இந்த அளவிற்கு பிரபலமடையும் என நினைக்கவில்லை என்கிறார் அருண் ராஜதுரை.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த அருண், 5 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் நியூஜெர்சிக்கு சென்றார். திருச்சி ஐஎச்எம் கல்லூரியில் கேட்ரீங் படித்த இவர், 2018 ம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த சமையல்காரர் விருதினை பெற்றுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.