7 ம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

7 ம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா

ஜனவரி 12,2021 

Comments

  உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு சார்பாக 11.1.2021 அன்று சென்னை அம்பாசிடர் பல்லவாவில் ஏழாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பின் தலைவர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் கவிஞர் ரவிபாரதி, மக்கள் இசை பாடகர் செந்தில் ராஜலட்சுமி மற்றும் கிராமிய பாடகர் சின்னப்பொண்ணு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழருடைய பண்பாட்டுப் பெருமைகளை எல்லாம் பாடலாகவும் எடுத்துச்சொல்லியும் வாழ்த்துரை வழங்கினர்.


இவ்விழாவில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக நடராஜா நாட்டிய பள்ளி மாணவிகள், ஸ்ரீ பரத நாட்டிய பள்ளி மாணவிகள் , லயோலா மாற்று ஊடகம் சார்பாக பறையிசை, கரகாட்டம், ஒயிலாட்டங்கள் நடத்தப்பட்டது. ஸ்டெல்லா மேரிஸ் பள்ளி மாணவிகள் தமிழர் பாரம்பரிய நடனம் என சிறப்பாக நடந்தது. ட்ரீம் ஜோன் நந்தா ஒருங்கிணைத்த தமிழர் பண்பாட்டு ஆடை அலங்கார அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது . 


விழாவில் பேசிய ராதாரவி, தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக உலகமெங்கும் இருக்கிற தமிழர் பிரதிநிதிகளை அழைத்து சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட தமிழர் திருநாள் விழா இன்று 7வது ஆண்டு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் உலகமெங்கும் இருக்கிற தமிழர் பிரதிநிதிகளை எல்லாம் பார்க்கிற பொழுது நம் தமிழ் உறவுகளை பார்க்கிற ஒரு பெருமகிழ்ச்சி இருக்கும்.


இந்த ஆண்டு கொரோனா காரணத்தினாலேயே இந்த அளவிற்கு நடத்த முடியுமா என்று இருந்த நிகழ்வில் இன்று மிகச் சிறப்பாக தமிழகத்தில் இருக்கிற தமிழர்கள் எல்லாம் அழைத்து இந்த நிகழ்ச்சியில் நடத்தி ஏறக்குறைய 20 நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிற நமது உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமாரை மனதார பாராட்டுகிறேன். எத்தனையோ மொழி இருந்தாலும் தமிழ் மொழிக்கு தனி சிறப்பு உண்டு. நாம் தமிழர்களாய் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய ஒரு செய்தி. நமக்கென்று தனி நாகரிகம் பண்பாடு வளர்ச்சி இருக்கிறது. இந்த கலை நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்து நான் பெருமிதம் கொள்கிறேன்.


இந்த நிகழ்ச்சியை பார்க்கிற அனைவரும் தமிழர்களுடைய பாரம்பரிய உணவு உடை போன்றவற்றை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்த முன்வரவேண்டும். இனி எல்லா இடங்களிலும் தமிழர்கள் வேட்டி கட்டி விழாக்களை சிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் தமிழருடைய வாழ்வாதாரம் குறிப்பாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடையும். பல்வேறு நெருக்கடிகளில் இருப்பினும் இந்த ஏழாம் ஆண்டு தமிழர் திருநாள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பிற்கும் அதன் தலைவருக்கும் பாராட்டுக்களும் நன்றியும் கூறி சிறப்புரை ஆற்றினார். இறுதியாக ஊடக பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் நன்றி உரை ஆற்றினார்.


– செல்வகுமார் (தலைவர், உலக தமிழர் வம்சாவளி அமைப்பு)Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us