துபாய் : துபாயில் நடந்த ஓட்டப் போட்டிகளில் கடந்த ஆண்டு சாதனை படைத்த சிறந்த வீரராக தமிழக இளைஞர் செய்யது அலி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். துபாயில் வசித்து வருபவர் செய்யது அலி. இவர் தமிழகத்தின் நாகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.கேரளா ரைடர்ஸ் என்ற அமைப்பு கடந்த ஆண்டு துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் நடந்த பல்வேறு ஓட்டப் போட்டி, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களை தேர்வு செய்து கவுரவித்தது. இதில் தமிழகத்தின் செய்யது அலி சிறப்பான வகையில் ஓட்டப் போட்டிகளில் சாதனை படைத்தமைக்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த ஒரு அமைப்பு தமிழக வீரருக்கு விருது வழங்கி கவுரவித்திருப்பது பெருமையளிக்கிறது. விருது பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.-- நமது செய்தியாளர் காஹிலா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.