லேகோஸ் : 2020 கொரோனா சர்வதேச பரவல் காரணமாக கட்டுப்பாடான வாழ்க்கையிலிருந்து சற்றே தளர்த்தப்பட்ட கோட்பாடுகளுடன் முன்னேறி வந்த நைஜீரியா வாழ் மக்களுடன் இந்திய சமூகத்தினர் மீண்டும் கோவிட் இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிற நிலையில் மீண்டும் முதல் தரப்பட்ட கோட்பாடுகள் செயல் முறையில் இருக்கின்றது. இதனால் கடந்த நவம்பர் மாதம் முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரண்டு மணி நேரம் கோவில் வளாகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இந்நிலை தற்போது மாறி மீண்டும் லாக் டவுன் நிலைக்கு செல்ல, முருகன் அருள் வேண்டி தைத்திருநாள் கொண்டாடப்பட்டது. தைத்திருநாளாம் ஜனவரி 14 அன்று லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 மணி அளவில் பொங்கல் பானை வழிபாடு தொடங்கி 11 மணியளவில் சிவகுமார் சிவாச்சாரியார் மஹா தீபாராதனை செய்து பொங்கல் பண்டிகையை அனைவரும் களிக்கும்படி செயலி மூலம் நேரலை செய்தார். – நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.