ஒமாஹா தமிழ்ப் பள்ளி 2002 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 8 ம் நிலை வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 100 குழந்தைகள் வரை தமிழ் பயின்று வருகின்றனர். தற்போது 7 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இப்பள்ளி, கொரோனா நோய் பரவல் காலத்திலும் குழந்தைகளின் நலன் கருதி சூம் செயலி மூலம் ஆன்லைனில் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் சுமார் 20 தமிழர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
ஆண்டுதோறும் 'தமிழர் விளையாடுக்கள்' என்ற நிகழ்ச்சி பள்ளி சார்பாக நடைபெறுகின்றது. இதில் குழந்தைகளுக்கு நம் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் கற்பிக்கப்பட்டு விளையாடப்படுகிறன. பள்ளியில் பல்வேறு வகையான் சிறுவர் புத்தகங்கள் கொண்ட நூலகம் செயல்படுகின்றது.ஒமஹா தமிழ்ப்பள்ளி முதல்வர் : இரவிக்குமார் சுப்ரமணியபிள்ளை ஒருங்கிணைப்பாளர் : சிதம்பரநாதன் அழகர்தொலைப்பேசி : (402) 882-6452இமெயில் : Omaha.Tamil.Palli@gmail.comஇணையதளம் : http://www.omahatamilpalli.org/– நமது செய்தியாளர் சிதம்பரநாதன் அழகர்
ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை : ஐரோப்பிய தமிழர்கள் வேண்டுகோள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.