நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

ஜனவரி 16,2021 

Comments

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம் 43 வருடத்திற்கு முன் ஒமஹா வாழ் இந்திய வம்சவளி மக்களால் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.இந்திய பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், வட அமெரிக்க சமுதாயத்திற்கு அதன் பங்களிப்பை அங்கீகரிக்கவும் உதவும் திட்டங்கள் மற்றும் சேவைகளை இசசங்கம் வழங்கி வருகிறது. ஒற்றுமையை வளர்ப்பதற்கான தனது முயற்சியையும், நெப்ராஸ்காவில் உள்ள இந்திய சமூகத்தின் மக்களிடையே இனக்கமான உறவையும் இச்சங்கம் பேணிக்கத்து வருகிறது. நெப்ராஸ்கா, ஒமஹாவில் உள்ள இந்திய சமூகத்தின் பிரதிநிதி அமைப்பாக நெப்ராஸ்கா சங்கம் சமூக சேவையை வழங்குவதில் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள அனைத்து பிரந்திய இந்திய மொழி சங்ககள் மற்றும் பிற அமெரிக்க அமைப்புகளுடன் இணைந்து தொண்டாற்றி வருகிறது.

இந்திய குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற விழாக்களை ஒமஹா வாழ் இந்திய மக்களுடன் இணைந்து ஆண்டுதொரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்திய கலச்சாரத்தினை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக ஆண்டுதொரும் ‘ரிதம்’ (RHYTHMS OF INDIA) எனும் கலச்சார திருவிழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்த சங்கம் நெப்ராஸ்காவில் உள்ள இந்திய மக்களுக்கு பல்வேறு அவசரகால உதவிகள், இந்திய குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.


நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம் இணையதள முகவரி :

https://www.indiaassociationofnebraska.org/Welcome.aspx


– நமது செய்தியாளர் சிதம்பரநாதன் அழகர்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி...

பிரியாணி விற்பனை மூலம் தமிழகத்திற்கு நிதி அளித்த நியூஜெர்சி அஞ்சப்பர் உணவகம்

பிரியாணி விற்பனை மூலம் தமிழகத்திற்கு நிதி அளித்த நியூஜெர்சி அஞ்சப்பர் உணவகம்...

பஹ்ரைனில் அன்னையர் தின சிறப்பு சொல்லரங்கம்

பஹ்ரைனில் அன்னையர் தின சிறப்பு சொல்லரங்கம்...

ராசல் கைமாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் 200 ஆண்டு கால பழமையான முஹம்மது பின் சலீம் பள்ளிவாசல்

ராசல் கைமாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் 200 ஆண்டு கால பழமையான ...

Advertisement

தற்போதைய செய்தி

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us