மாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா கொண்டாட்டம்

ஜனவரி 16,2021 

Comments

   ஜனவரி 15 அன்று மாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது . விழாவிற்கு மாலத்தீவு தமிழ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் வினோ தேவராஜ் தலைமை தாங்கினார். மாலத்தீவு நாட்டின் இந்திய தூதரகத்தின் இந்திய கலாச்சார மையத்தின் இயக்குணர் திருமதி சயித் தன்வீர் நச்ரீன் (Syed Tanveer Nasreen) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம் நாடுகளை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு தமிழர் திருநாளை அண்டை நாட்டை சார்ந்தவர்களும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவில் கால்பந்து போட்டி, வடம் இழுக்கும் போட்டி, உறியடிக்கும் போட்டி, சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன . விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கப்பட்டது.

விழாவில் கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் கடந்த ஆண்டு சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழா நிகழ்ச்சிகளை தமிழ் நண்பர்கள் குழு மற்றும் ராயல் டைகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் சர்வீஸ் டீம் உறுப்பினர்கள் இணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.

– நமது செய்தியாளர் அபு ஹிஃபா




Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us