லண்டனில் தமிழ் பேசும் மக்களின் தோற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லண்டனில் தமிழ் பேசும் மக்களின் தோற்றம்

ஜனவரி 19,2021 

Comments

லண்டன் தமிழ் அருங்காட்சியகம் நடத்தும் மாதாந்திர கருத்தரங்க வரிசையில் மூன்றாம் கருத்தரங்கமாக "தமிழ்மொழி பேசும் மக்களின் தோற்றம்" என்ற தலைப்பில் ஜனவரி 16 அன்று நடைபெற்றது. இதில் மருத்துவர் சிவா தியாகராஜா சிறப்பானதொரு பேச்சினை நல்கினார்.

தமிழ் மக்களின் தோற்றத்தை இலக்கிய மூலங்கள், நிலவியல், மானிடவியல், தொல்லியல், மரபணுவியல் என்ற பல பிரிவுகளில் விவரமாக எடுத்துரைத்தார். இதை நூற்றுக்கும் மேலானோர் இணையவழியில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அதற்கு முந்தைய தினமான ஜனவரி 15 அன்று, ஒரிசா பாலுவின் வழிநடத்தலில் இயங்கும் உலகளாவிய இளந்தமிழர் குழுவுடன் லண்டன் தமிழ் அருங்காட்சியகம் சார்ந்த சிவா பிள்ளை, ரஞ்சனா மற்றும் இரமீயனுடன் ஒரு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளந்தமிழர் குழுவின் உறுப்பினர்கள் தமிழ் அருங்காட்சியகம் திட்டமிட்டுள்ள மின் அருங்காட்சியகத்திற்கு வேண்டிய ஒத்துழைப்பை நல்க முடிவு மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் அனைவருக்கும் பயன்படும் படியான மின் தமிழ் அருங்காட்சியகம் நிறுவப்பட்டு, virtual reality மற்றும் augmented reality உதவியுடன் அது மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழர் பற்றிய வரலாற்றுக் கூறுகளை தர உள்ளது என்று எடுத்துக் கூறப்பட்டது.

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us