ஆக்லாந்தில் சங்கீத ஆசிரியர்களின் இசை நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் சங்கீத ஆசிரியர்களின் இசை நிகழ்ச்சி

ஜனவரி 19,2021 

Comments

   நியூஸிலாந்து கர்னாடிக் மியூசிக் சொசைட்டி ஆக்லாந்தில் கர்நாடக சங்கீத ஆசிரியர்களை கொண்டாடும் வகையில் சங்கீத ஆசிரியர்களின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 17/1/2021 அன்று மதியம் 2 மணிக்கு சுமார் ஐந்து மணி நேரம் ஒனேஹன்காவில் உள்ள சாந்தி நிவாஸில் இசை நிகழ்ச்சி நடந்தது. 

  முதலில் யசோ மகேந்திரனின் இசை நிகழ்ச்சி தொடங்கியது. பார்வதி நாயகனே என்ற கீர்த்தனையை ஷண்முகப்ரியா ராகத்தை முக்கிய ராகமாக எடுத்து அவர் செய்த ஆலாபனையும், ஸ்வர பிரஸ்தாரமும் மிகச்சிறப்பாக அமைந்தது. அடுத்து துளசி பிரபாகரனின் கச்சேரி தொடங்கியது. மிக இனிமையாக அவர் பாடிய பெஹாக் ராக வர்ணமும், தொடர்ந்து ஆபோகி, கல்யாணி, கர்ணரஞ்சனி ராகங்களில் அமைந்த கீர்த்தனங்களை பாடி சிறப்பாக முடித்தார். 

பின்னர் பிரியா விஜய்யின் இசை கச்சேரியில் அவர் நாட்டை, ராமப்ரியா, மோஹனம் ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை சிறப்பாக பாடி, ரஞ்சனி ராகத்தில் அமைந்த திருபுகழையும் பாடி ஆண்டாள் நாச்சியார் திருமொழியை பாடி கச்சேரியை பூர்த்தி செய்தார். இவருக்கு பக்க வாத்தியமாக டாக்டர் அசோக் மலூர் வயலினும், ஸ்ரீராம் பாலச்சந்திரன் மிருதங்கமும் வாசித்தனர். 

  அடுத்து சிறந்த வீணை இசை கலைஞரான திவாகர் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது. அவருடன் அவரின் மாணவியான குமாரி தீக்ஷா வீணையும், துருவ் கீபோர்டும் இசைத்தனர் . திவாகர் பாடிய நவராகவர்ணமும், தொடர்ந்து கேதாரம், ஷண்முகப்ரியா, நவரச கானடா மற்றும் வலஜி ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். 

டாக்டர் அசோக் மலூரின் வயலின் கச்சேரியோடு இந்நிகழ்ச்சி முடிந்தது. அவர் வயலினில் வலஜி, ஹிந்தோளம், பேகடா மற்றும் காலாவதி ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை மிக இனிமையாக வாசித்தார். இவர் மேலும் அன்று நடந்த அனைத்து கச்சேரிகளுக்கும் இசை கலைஞர்களோடு இணைந்து மிகச்சிறப்பாக வயலின் இசைத்தார்.

இசைக்கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் திறம்பட இசைத்தவர்கள் முறையே புருஷோத் மகேந்திரன், சாய்தரன் பிரபாகரன், ஸ்ரீராம் பாலச்சந்திரன், மற்றும் அவினாஷ் இவர்களின் தனி ஆவர்த்தனம் கச்சேரிகளுக்கு மெருகூட்டியது. 


ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சிறிதும் தொய்வில்லாமல் நடந்த கச்சேரிகளை ரசிகர்கள் அரங்கம் நிறைந்த கரகோஷத்தை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவிட் வந்த நாள் முதல் இத்தனை நாட்களாக வீட்டில் இருந்து கணினி மூலம் கச்சேரி கேட்டவர்களுக்கு இன்று அரங்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது எனலாம். 

இறுதியில் ரவி நாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் சிறந்த தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.


– நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்




Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us