பஹ்ரைனில் தமிழர் திருநாள் பன்னாட்டு சிறப்பு பட்டிமன்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் தமிழர் திருநாள் பன்னாட்டு சிறப்பு பட்டிமன்றம்

ஜனவரி 21,2021 

Comments

பஹ்ரைனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமெரிக்கா தொலைக்காட்சியினில் எங்க ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வினில் பன்னாட்டு பட்டிமன்றம் - அன்று முதல் இன்றுவரை ஆண்களுக்கு பெண்கள் கதாநாயகி - வில்லி என்ற இரண்டு தலைப்பிலே பேச்சாளர்கள் சுவைபட நகைச்சுவையுடன் தமிழ்ச்சுவையுடன் பாடல்கள் - மேற்கோள்கள் - இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகள் என்று இனிமையான தகவல்களுடன் வாதிட்டனர். நடுவர் முனைவர் கவிஞர்.கோ.கணபதி சுப்பிரமணியன், தனது பங்கிற்கு சுவையான கருத்துக்களுடன் நகைச்சுவையுடன் குறுக்கீடுகள் செய்து நிகழ்வினை மேலும் சுவையாக்கினார். கதாநாயகிகள் என்ற தலைப்பினில் - ஆஸ்திரேலியாவில் இருந்து கலா பாலஷண்முகம், பஹ்ரைனிலிருந்து சொல்வேந்தர்.சி.பாலசுப்பிரமணியன், அமெரிக்காவில் இருந்து சுபா காரைக்குடி ஆகியோரும் வாதிட, வில்லிகள் என்ற தலைப்பினில் லண்டனில் இருந்து சங்கீதா செல்வின், ஓமானிலிருந்து தருமாம்பாள் சீனிவாசன், இந்தியாவிலிருந்து ராமன் குருச்சரண் ஆகியோரும் எதிர்வாதம் செய்தனர். நடுவர் வாத பிரதிவாதங்களை அலசி தனது தீர்ப்பு - கதாநாயகிகளுக்கே என்று கூறினார். பொங்கல் திருவிழாவுக்காக பொருத்தமான சுவைமிகு பட்டிமன்றம் என நல்ல வரவேற்பு கிட்டியது...முன்னதாக மும்பை கணேஷ் மெலோடிஸ் குழுவினர் திரை இசை வழங்கினர். சிறப்பு விருந்தினர் திரைப்பட இயக்குனர் சிம்பு தேவன், தொடர்புடையோரின் தமிழ் சேவையினை பாராட்டியும் நிகழ்வினை வாழ்த்தி உணர்வுடன் பாராட்டி பேசினார். முனைவர் பா.மேகநாதன் நெறியாள்கையுடன், மகேஷ் நாட்டாண்மை வரவேற்புரையுடன், சித்தார்த்,தமிழ் இயலன், பொன் சங்கர பாண்டியன், அறிவழகன் ஆகியோரின் வாழ்த்துரையுடன் திருமதி.தாரணி நன்றியுரை நவில சிறப்புடன் அமைந்தது. நிகழ்வினை தில்லி கலை இலக்கிய பேரவையின் செயலாளர் பா.குமார் ஒருங்கிணைப்பு செய்தார். இணைய வழியினில் நடந்த இந்த நிகழ்வு முகநூல் வழியிலும் ஜூம் இணைப்பிலும் - தொலைகாட்சி வழியிலும் பல்லாயிரக்கணக்கானோரால் கண்டு ரசிக்கப்பட்டது. பொங்கல் திருவிழாவினை உலக தமிழர்கள் உளமார கொண்டாடிய நிகழ்வாக இந்த தைத்திங்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் அமைந்தது. – தினமலர் வாசகர் சிங்காரவேலு பாலசுப்ரமணியன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us