இந்தியாவின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் இரத்ததான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்தியாவின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதியில் இரத்ததான முகாம்

ஜனவரி 23,2021 

Comments

சவூதி அரேபியா:- எண்ணற்ற கனவுகளுடன் தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ள இந்தியர்கள் தங்களின் ஓய்வு நேரங்களை பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக செலவிட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) தன்னார்வ தொண்டர்கள் உதவிகள் தேவைப்படும் அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் அவர்களின் துயரம் அறிந்து பல்வேறு சமூக நலப்பணிகளை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் உதவியுடன் வளைகுடா மற்றும் இன்னபிற நாடுகளில் செய்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக தேசம் கடந்து வாழ்ந்து வரும் ஜமாஅத்தின் தன்னார்வ தொண்டர்கள் இரத்ததானம் செய்வதில் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக 22/01/2021, வெள்ளிக்கிழமை இந்திய நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) இணைந்து நடத்திய 113-வது மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் 114க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து 101 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.அதனை தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் ஷேக் பிரேம் நவாஸ் (பொறுப்பு), இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கத்தை சொல்வதென்றால், “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தை தவிர வேறெதுவுமில்லை. இன்னும் முத்தாய்ப்பாக சொல்வதென்றால்…“யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32என்ற திருக்குர்ஆன் வசனத்தை நடமுறைப்படுத்தி, அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் மனிதத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக் கூடியவர்கள் என்ற உண்மையை உலகிற்கு பறை சாற்றவும், ஏக இறைவனிடத்தில் மட்டுமே இதற்குரிய நற்கூலியை எதிர்பார்த்தவர்களாகவும், இந்த மகத்தான பணிகளை செய்து வருவதாகக் கூறினார்.மேலும் இம்முகாம் குறித்து கூறிய, மண்டல தலைவர் செய்யது இப்ராஹீம் "இன்றைய முகாமின் துவக்கத்தில் கடும் குளிர் நிலவியது" இருந்தும் பிறரின் தேவையறிந்து உயிர் காக்கும் இந்த மனித நேயப் உதவியை எங்களின் தன்னார்வ தொடர்களும், குருதி கொடையளிப்பவர்களும் சந்தோசத்துடனும், தன்னார்வத்துடனும் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்திருந்தனர்.மேலும் அவர் பேசுகையில், இந்திய விடுதலைக்காக இந்தியாவில் வாழ்ந்த நமது முன்னோர்களின் பங்களிப்பு அளப்பெரியது அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் பங்கு ஆரம்பகாலம் முதல் இறுதிவரை வீரமாகவும், மிக விவேகமாகவும் இருந்தே வந்துள்ளது. அதே வேகமும், வேட்கையும் கொண்டு கடல் கடந்து வாழும் இந்தியர்களை சகோதரத் துவத்துடன் எந்த ஒரு பாகுபாடுகளும் இன்றி இந்தியர்கள் என்ற உணர்வுடன் இன்று ஒன்றிணைந்தனர்.இது போன்ற தியாகங்களாலும், சகோதரத்துவதாலும் வளர்ந்து வரும் இந்திய நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் விதமான எந்தவொரு நிகழ்வுகளுக்கும் இந்தியர்களாகிய நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்று பறைசாற்றும் வண்ணம் நமது முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் தங்களின் குருதியை தானமாக வழங்கி இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்திலும், நம் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து இந்தியர்களின் தியாகங்ககளையும், தேச பற்றையும் பிறநாடுகளில் பறை சாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தங்களின் குறுதி தியாகத்தாலும் நிரம்ப செய்துள்ளது நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.இந்த முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல, கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர்கள் நன்றி தெரிவித்தனர்.அனைத்து கொடையாளிகளும், தன்னலமில்லாது பிறர் நலம் பேணும் இந்த பணியில் பங்கு கொண்டதை எண்ணி உள்ளம் மகிழ்ந்து இந்திய குடியரசு தின எண்ணத்தோடு விடைபெற்றனர்.– தினமலர் வாசகர் முகம்மது அக்தர்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us