மெல்பேர்ன் ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஜனவரி 25 ம் தேதியன்று, காலை 9.15 மணிக்கு துவங்கி, 10.30 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. ஜனவரி 17 ம் தேதின்று துவங்கிய மகா கும்பாபிஷேக விழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் ஆகியன நடைபெற்றன. ஜனவரி 26 ம் தேதி துவங்கி தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.
கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு சமயத்தில் 400 பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தன்று அனுமதிக்கப்பட்டனர். மற்ற பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தபப்ட்டுள்ளது.– நமது செய்தியாளர் முருகன்.என்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.