ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா

ஜனவரி 29,2021 

Comments

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா ஜனவரி 19ஆம் தேதியன்று (19/1/2021) முருகனுக்கு அபிஷேகத்துடன் ஆரம்பித்து பக்தர்களுக்கு காவடி மற்றும் பால்குடம் நேர்த்திகடன் செய்பவர்களுக்கு கங்கணம் கட்டும் இந்த காவடி விழா வைபவத்துடன் ஒனேஹங்காவில் உள்ள சாந்தி நிவாசில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதையொட்டி காவடி திருவிழா 23/1/202021 அன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. காவடி மற்றும் பால்குடம் ஏந்தும் பக்தர்கள் அதற்குண்டான ஏற்பாடுகளை மிக அழகாக செய்திருந்தார்கள். பெரும்பாலான பக்தர்கள் சவுத் ஆப்ரிக்கா மற்றும் பிஜி தீவை சேர்ந்தவர்கள். அவ்விழாவில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பால் காவடி, புஷ்பக்காவடி மற்றும் பால்குடத்துடன் பக்தியுடன் எடுத்து வந்தார்கள். அவர்களில் சில பக்தர்கள் நாக்கு மற்றும் உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பக்தர்கள் காவடிகளில் சுமந்து வந்த பாலைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் தயிர், தேன், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அபிஷேகம் நடைபெற்ற போது வேத விற்பன்னர்கள் வேதம் ஓதியும் ருத்ர ஜபம் செய்தும் முருகனை துதித்தார்கள். சிலர் மாவிளக்கேற்றி தங்கள் பிரார்த்தனையை முடித்தார்கள்.பிறகு பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும், கந்தசஷ்டி கவசம் துதித்தும் முருகனை போற்றியும் இசைத்தும் வழிபட்டனர்... சுமார் 200க்கும் மேலே பக்தர்கள் திரண்டு 'முருகனுக்கு அரோஹரா ' என்று மெய்மறந்து எழுப்பிய கோஷம் செய்தது விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது. பக்தர்கள் அனைவருக்கும் மஹாப்ரசாதம் வழங்கப்பட்டது. தைப்பூசத் திருநாளாம் இன்று 28/1/2021 மாலை 7 மணியளவில் முருகனுக்கு சில பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பின்னர் பால் மற்றும் எல்லா விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மற்றும் விசேஷ அர்ச்சனை மற்றும் பலவித ஆரத்திகள் காண்பித்தும் முருகன் வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் பஜனை பாடல்கள் பாடியும் , கந்தசஷ்டி கவசம் கூறியும் நெஞ்சுருக வேண்டி முருகனின் அருளை பெற்றனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. 19 வருட காலமாக இவ்விழா சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. – நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us