பிஜி குடியரசிற்கான இந்திய தூதராக தமிழர் நியமனம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிஜி குடியரசிற்கான இந்திய தூதராக தமிழர் நியமனம்

பிப்ரவரி 02,2021 

Comments

  பிஜி குடியரசின் இந்தியாவிற்கான தூதராக தமிழகத்தை சேர்ந்த பழனிசாமி சுப்ரமணியன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கான இந்திய துணை தூதராக இருக்கும் இவர், விரைவில் தூதராக பதவியேற்க உள்ளார்.தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2004 ல் ஐஎப்எஸ் பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாத்தில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயின்றவர். சிறந்த ஐஎப்எஸ் அதிகாரிக்கான விருதினை பெற்ற இவர் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கொள்கை திட்ட மற்றும் ஆராய்ச்சி பிரிவிலும் பணியாற்றினார். 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் டமாஸ்கசில் உள்ள இந்திய தூதரகத்திற்கு செல்வதற்கு முன் ஐநா.,வுக்கான பொருளாதார மற்றும் சமூக பிரிவிலும் பணியாற்றி உள்ளார். 2009 ல் சிரியாவில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார்.

2009 முதல் 2013 வரை மாலத்தீவு தூதராகவும், இரண்டாம் மற்றும் முதல் நிலை செயலாளராகவும் பணியாற்றினார். 2016 ல் கர்நாடக அரசின் உயரிய விருதினை பெற்றுள்ளார். 2017 மார்ச் முதல் 2018 மார்ச் வரை நேபாளம் மற்றும் பூடான் உறவுகளை மேம்படுத்துவதற்கான வெளியுறவுத்துறை அமைச்சக தலைமையகத்தில் இயக்குனராக செயலாற்றினார். 2018 ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவிற்கான இந்திய துணை தூதராக பொறுப்பேற்றார்.

இவர் வேலூரை சேர்ந்த வனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சிஸ்டம் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

– நமது செய்தியாளர் கோவிந்த ராஜ்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us