நியூசிலாந்து திருமுருகன் ஆலயத்தில் மஹோற்சவ விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூசிலாந்து திருமுருகன் ஆலயத்தில் மஹோற்சவ விழா

பிப்ரவரி 06,2021 

Comments

நியூசிலாந்து திருமுருகன் ஆலயத்தில் வருடாந்திர மஹோற்சவ விழா ஜனவரி 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பிப்ரவரி 3 ம் தேதி நிறைவடைந்தது. ஜனவரி 21 ம் தேதி பூர்வாங்க கிரியைகள் நடத்தப்பட்டு, 22 ம் தேதி கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. ஜனவரி 23 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நாள்தோறும் அபிஷேகம், நித்திய பூஜைகள், வசந்த மண்டப பூஜை, உள்வீதி உற்சவம் ஆகியன நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஜனவரி 26 ம் தேதி மாம்பழத் திருவிழாவும், தைப்பூச திருநாளாம் ஜனவரி 28 ம் தேதியன்று காவடித்திருவிழா நடைபெற்றது. அன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.ஜனவரி 29 ம் தேதி சப்பரத் திருவிழா, 30 ம் தேதி ரதோற்சவம், ஜனவரி 31 ம் தேதி தீர்த்தோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது. பிப்ரவரி 1 ம் தேதி பூங்காவனத் திருவிழா நடைபெற்றது. பிப்ரவரி 02 ம் தேதி ரைவர் விஷேச பூஜை, 03 ம் தேதி பிராயச்சித்த அபிஷேகம் ஆகியன நடத்தப்பட்டது. விழாவின் அனைத்து நாட்களும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டது. பெருந்திரளான பக்தர்கள் நாள்தோறும் கலந்து கொண்டு முருகனின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us