கனடா தமிழ் சங்கம் நடத்திய 3வது தமிழர் மரபு மாநாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கனடா தமிழ் சங்கம் நடத்திய 3வது தமிழர் மரபு மாநாடு

பிப்ரவரி 08,2021 

Comments

  கனடா தமிழ்ச் சங்கம் உலக அளவில் 3வது தமிழர் மரபு மாநாடு, ஜனவரி 31ம் தேதி கனடா தமிழ் சங்க நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் மற்றும் மாநாடு நிர்வாக குழு ஒருங்கிணைப்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாடு குறித்து நேரத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கும், கனடா கிழக்கு நேரப்படிஇரவு 9 மணிக்கும் இணையம் வழியாக ஜூம் செயலி மூலம் ஆரம்பிக்கப்பட்டது. முழு நிகழ்ச்சியும் முகநூலிலும், யூடியூபிலும் மற்றும் சில தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சுதாகரன் பஞ்சாச்சரம் மற்றும் நந்தினி முத்துக்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஹரிணி வள்ளிக்கண்ணன் தமிழ்தாய் வாழ்த்து பாடினார். தொடர்ந்து ஷரோன் ஜோஷுவா, ஆன்ட்ரியா மற்றும் சின்டிரெல்லா கனடிய தேசியகீதம் பாடினர். அடுத்து உலக சமாதானத்திற்காகவும் தமிழுக்காக உயிர்நீத்த தமிழர்களுக்காகவும் ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கலையருவி நாட்டிய பள்ளி ரேணுகாதேவி விக்னேஸ்வரனின் மாணவி குபேரகா குமரேசனின் பரதநாட்டியம் நடைபெற்றது.கனடா தமிழ்ச் சங்கம் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் ஒரு தெளிவான வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து மதுரை கோவிந்தராஜ் கலை மேம்பாட்டு நிறுவனத்தின் கலைஞர்கள் தமிழ் மரபு கலையின் கொம்பு பறையாட்டம் ஆடினார்கள்.இந்த மாநாட்டில் சிறந்த ஆளுமைகளுக்கு 'தமிழ் மரபு காவலர் விருதுகள் 2021' வழங்கப்பட்டது. தமிழ் பண்பாடு மற்றும் மொழி வளர்ச்சிக்காக தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜனுக்கு (இந்தியா) 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை ஒண்டாரியோ மாநிலச்சபை உறுப்பினர் லோகன் கணபதி MPP அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார்.தமிழ் கல்வி மற்றும் கலைக்காக தமிழக பட்டிமன்றம் புகழ் முனைவர்.கு.ஞானசம்பந்தம் (இந்தியா) க்கு 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை கனடாவில் இருந்து மருத்துவர்.ரகுராமன் அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார். தமிழ் திரைப்பட கலைக்காக இயக்குனர் பாரதிராஜாவுக்கு (இந்தியா) 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை இந்தியாவில் இருந்து இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார்.தமிழர் ஆய்வுக்காக ஆர்.பாலகிருஷ்ணன் IAS (இந்தியா) வுக்கு 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை கனடாவில் இருந்து கனடா உதயன் பத்திரிக்கை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார். தமிழ் சித்த மருத்துவதிற்காக மருத்துவர்.கு.சிவராமன் (இந்தியா)க்கு 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை கனடாவில் இருந்து மருத்துவர்.போல் ஜோசப் அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார்.தமிழ் இலக்கியதிற்க்காக செபஸ்தியாம்பிள்ளை இராசநாயகம் (கனடா) க்கு 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை இந்தியாவில் இருந்து சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர்.நா.சுலோசனா அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார். தமிழ் நாடகக் கலைக்காக அன்ரன் பீலிக்ஸ் (கனடா) க்கு 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை இந்தியாவில் இருந்து சென்னை ஆவடி மஹாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர்.அ .இஸ்பா அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார்.தமிழ் வளர்ச்சி மற்றும் சமூகப்பணிக்காக பாலா சுவாமிநாதன் (அமெரிக்கா) க்கு 'தமிழ் மரபு காவலர் 2021' வழங்கப்பட்டது. அவரை அமெரிக்காவில் இருந்து நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைத்து சிறப்பித்தார். முதல் தமிழ் பெண் வானோடியான காவ்யா ரவிக்குமார் (இந்தியா)க்கு 'தமிழ் மரபு காவலர் 2021' விரைவில் வழங்கப்பட உள்ளது. அவரை இந்தியாவில் இருந்து மதுரை சமூக செயல்பாட்டாளர் செல்வம் ராமசாமி அறிமுகம் செய்து வைத்து சிறப்பிக்கவுள்ளார். இந்த விருது விரைவில் வழங்கப்படும்.விருது பெற்ற அனைவருக்கும் கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் விருதுகளை வழங்கினார். கலந்து கொண்டு விருது பெற்ற அனைத்து ஆளுமைகளும் ஏற்புரை வழங்கி பெருமிதம் கொண்டும் கனடா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் தொண்டினையும் பாராட்டினார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு இடையே மதுரை கோவிந்தராஜ் கலை மேம்பாட்டு நிறுவனத்தின் 21 கலைஞர்களின் தமிழ் மரபு கலைகளான கரகாட்டம், மாடாட்டம், கட்டக்கால் ஆட்டம், கிழவன் கிழவி ஆட்டம், காவல் வீரன் கருப்புசாமி ஆட்டம் ஆடி நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.இறுதியாக கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான பார்வதி வள்ளிக்கண்ணன் நன்றியுரை வழங்க, 3வது தமிழர் மரபு மாநாடு 2021 மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றது.Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us